சத்துள்ள உளுந்து வடை
தானியங்களில் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது உளுந்து..
உளுந்து தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது.
உளுந்தில் வெள்ளை மற்றும் கருப்பு நிறம் உளுந்துகள் உள்ளன.
கருப்பு உளுந்தை விட வெள்ளை உளுந்தின் சத்துக்கள் சற்றே குறைவு.
தேவையான பொருட்கள்:
குண்டு உளுந்து - 1/2 கிலோ
இஞ்சி - ஒரு இன்ச்
ப. மிளகாய் - 2
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையானவை
பெ. வெங்காயம் - 1
செய்முறை:
🌹ஒரு பாத்திரத்தில் உளுந்தை போட்டு தண்ணீர் ஊற்றி அலசி வேறு தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற விடவும்..
🌹மிளகு மற்றும் சீரகத்தை பொடித்து வைத்துக் கொள்ளவும்.
🌹இஞ்சி, ப. மிளகாய் , கறிவேப்பிலை ,வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலை இவ்வனைத்தையும் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
🌹உளுந்து ஊறியவுடன் தண்ணீரை வடித்து, மிக்ஸியில் போட்டு அரைக்கவும். கெட்டியாக அரைக்கவும்.. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து அரைக்கலாம், அதிகமாக ஊற்ற வேண்டாம்.
🌹அரைத்த உளுந்தை ஒரு பாத்திரத்தில் போட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, ப. மிளகாய்,கொத்தமல்லி இலை, பெருங்காயம், உப்பு , மிளகு- சீரகத்தூள் இவ்வனைத்தையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
🌹அடுப்பில் வாணெலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுந்து மாவு உருண்டை பிடித்து நடுவில் விரல் வைத்து அழுத்தி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
கிறிஸ்பியான சத்துள்ள உளுந்து மெதுவடை தயார்
கருப்பு உளுந்தை விட வெள்ளை உளுந்தின் சத்துக்கள் சற்றே குறைவு.
உளுந்தின் பயன்கள்
செரிமானத்தை அதிகரிக்கும். .
உடலின் ஆற்றலை அதிகரிக்கும். ..
எலும்புகள் வழு பெறும்...
குழந்தைகளின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது.
உடல் எடையை அதிகரிக்கும்....
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலியை போக்கும்....
கர்ப்பப்பையை வலுப்படுத்தும்....
இன்னமும் ஏராளமான பயன்கள் உள்ளன.
உணவே மருந்து, மருந்தே உணவு