நலங்குமாவு குளியல் பொடி
தேவையான பொருட்கள்:
பச்சைப் பயிறு - 500கி
கடலைப்பருப்பு - 100கி
ரோஜா பூ - 100கி
ஆவாரம் பூ - 100 கி
பூலாங்கிழங்கு - 100கி
கோரைக் கிழங்கு - 100கி
கஸ்தூரி மஞ்சள் - 100கி
வெட்டி வேர் - 10 கி
செய்முறை:
அனைத்து பொருட்களையும் ஒன்றாக வெயிலில் காய வைத்து, மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்..
பயன்கள்:
🌹பச்சைப் பயிறு - ஆன்டி ஆக்ஸிடென்ட் பண்புகளை கொண்டுள்ளது..
பச்சை பயிறு சருமத்தை சுத்தம் செய்து பளிச் என்று வைக்கிறது..
🌹கடலைப்பருப்பு - பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டக் கூடியது. சுருக்கம் ஏற்படாது.. முகம் வழுவழுப்பாக இருக்கும்.
🌹ரோஜா பூ - சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும்.
🌹ஆவாரம் பூ - சருமத்தை வெண்மையாகவும்
தங்கம் போலவும் வைத்திருக்கும்.
🌹பூலாங்கிழங்கு - இது ஒரு கிருமி நாசினி..உடலில் நறுமணம் வீசும். தோல் நோய்களுக்கு மிகவும் நல்லது.. முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவற்றை தடுக்கும்..
🌹கோரைக்கிழங்கு - சுருக்கத்தை போக்கி தோலுக்கு மென்மையை தருகிறது. முகப்பரு,வியர்க்குரு,மரு வராமல் தடுக்கிறது..
🌹கஸ்தூரி மஞ்சள்- இறந்த செல்களை எதிர்த்து போராடுகிறது.. தேவையற்ற முடிகளை அகற்றுகிறது. முகம் பொலிவு பெறுகிறது.. இது ஒரு ஆன்டிஆக்ஸிடன்ட்..
🌹வெட்டிவேர் - இது முகத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய் பசையை எடுத்து விடும். வெட்டி வேர் குளிர்ச்சியை தருவதுடன் நல்ல நறுமணத்தையும் தருகிறது..
நல்ல நிறத்தை அதிகரிக்க கூடிய இந்த குளியல் பொடியை குளிக்கும் போது சிறிது மாவுடன் தண்ணீர் சேர்த்து பயன்படுத்தவும்..
Tags:
நலங்குமாவு