சத்துள்ள முளைகட்டிய பாசி பயிறு அடை செய்வது எப்படி?

 முளைகட்டிய பாசி பயிறு அடை 


                 பாசிப்பயிறை   ஒரு கப்பை  எடுத்து  தண்ணீரில் அலசி  மீண்டும் தண்ணீர் ஊற்றி  6மணி நேரம் ஊற  வைக்கவும்..    6 மணி நேரம்  கழித்து தண்ணீர் வடித்து  தட்டு போட்டு   மூடி  வைத்து  காலையில்  பார்க்கும்போது  முளைக்கட்டி இருக்கும்.. இல்லையென்றால் ஒரு காட்டன் துணியில் போட்டு கட்டி  வைத்து காலையில் பார்த்தால் முளைகட்டி இருக்கும். வளரும்  குழந்தைகளுக்கு  ஏற்றது.. 


புரோட்டின் நிறைந்த  பாசிப்பயிறு அடை செய்வது  எப்படி? 


தேவையான பொருட்கள்

அரிசி                                           - 1/4கிலோ

முளைகட்டிய பாசிப்பயறு  - 1கப்

இஞ்சி                                          - சிறிது

காய்ந்த மிளகாய்            - 2

எண்ணெய்                            -1/4கப்

உப்பு                                              - தேவை

சீரகம்                                            - 1/4 ஸ்பூன்

மிளகு                                          -  1/4 ஸ்பூன்

கறிவேப்பிலை                  - சிறிது

பெ. வெங்காயம்               - 1


செய்முறை


                      🍅புழுங்கல் அரிசி அல்லது  இட்லி  அரிசியை  தண்ணீர் விட்டு அலசி  மீண்டும் தண்ணீர்  ஊற்றி         ஊற  போடவும்.. 


                     🍅 ஊறிய   பின்பு     தண்ணீரை   வடித்து மிக்ஸி ஜாரில் அரிசியை  போட்டு   கொர கொரப்பாக   அடை பக்குவத்தில்   அரைத்து   ஒரு பாத்திரத்தில்   ஊற்றவும்.. 


                    🍅பின்பு   அதே   மிக்ஸி ஜாரில்   முளைகட்டிய   பாசிப்பயறு,   இஞ்சி,  சீரகம்,   மிளகு, காய்ந்த  மிளகாய்,   கறிவேப்பிலை, பெரிய வெங்காயம்  போட்டு அரைத்து  அரிசி  மாவுக்குள்  ஊற்றவும். 


                  🍅மாவிற்கு  தேவையான அளவு  உப்பு   சேர்த்து  கலந்து வைக்கவும். 


                🍅தோசை  தவாவை  அடுப்பில்  வைத்து    சூடானவுடன்  எண்ணெய் தடவி   மாவை   எடுத்து   ஊற்றி  மேலே  எண்ணெய் விடவும்.. அடையை  திருப்பி  போட்டு  வேக  விடவும்..


சூடாக சாப்பிட்டால்  சுவையாக  இருக்கும்.. தேங்காய் சட்னி சூப்பர் காம்பினேஷன்.. 


சுவையான  சத்துக்கள்  நிறைந்த  பாசிப்பயறு  அடை  தயார்


முளைகட்டிய பாசிப்பயறின் நன்மைகள்


நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.. 

உடல் எடையை குறைக்க உதவும்.. 

வைட்டமின் ஏ உள்ளதால், கண்  பார்வை மேம்படும்.. 

இரத்த  அழுத்தத்தை குறைக்கிறது.. 

இதயம்  ஆரோக்கியம் உண்டாக்கும்.. 

நீரழிவு நோயை தடுக்கிறது.. 

புற்றுநோய்  செல்களை  உருவாகாமல் தடுக்க செய்கிறது.. 

சருமத்தை  மேம்படுத்துகிறது........


அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு! 

Post a Comment

Previous Post Next Post