சுவையான அவல் வெஜ் பிரியாணி
தேவையான பொருட்கள்:
அவல் - 2கப்
உருளைக்கிழங்கு🥔 - 1கைப்பிடி
கேரட்🥕 - 1கைப்பிடி
பீன்ஸ் - 1கைப்பிடி
காலிஃப்ளவர் - 1கைப்பிடி
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு🧄 - 5பல்
சோம்பு - 1/2 ஸ்பூன்
கசகசா - 1/2 ஸ்பூன்
பட்டை - 2
எண்ணெய் - 7 ஸ்பூன்
பெரிய வெங்காயம்🧅- 2
பிரிஞ்சி இலை - 2
தக்காளி - 1
செய்முறை
அனைத்து காய்கறிகளும் தண்ணீர் விட்டு அலசி எடுத்து வைக்கவும்.
இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
தோல் நீக்கக் வேண்டிய காய்கறிகளை தோல் நீக்கி, அனைத்து காய்கறிகளையும் நீள வாக்கில் அரிந்து கொள்ளவும்.
அவலை தண்ணீரில் கழுவி, நீரை வடித்து வைக்கவும்.
வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கசகசா தாளித்து பட்டை, பிரிஞ்சி இலை,பெ.வெங்காயம் (நீள வாக்கில் அரிந்தது),இஞ்சி -பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.. பச்சை மிளகாயை கீறி அதற்குள் போட்டு வதக்கவும்.
பிறகு அரிந்து வைத்துள்ள காய்கறிகளை போட்டு உப்பு சேர்த்து , சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும்..
காய்கறிகள் வெந்தவுடன் தண்ணீர் விட்டு அலசி வைத்துள்ள அவலை உதிர்த்து சேர்த்து, ஓரிரு நிமிடங்கள் கிளறி இறக்கவும்..
சுவை கூடுதலாக வேண்டும் என்றால் பிரெட் துண்டுகளை எண்ணெயில் பொரித்து இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்..
சுவையான அவல் -வெஜ் பிரியாணி தயார்..
அவல் பயன்கள்
🍅 அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது.
🍅வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது.
🍅எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கிறது.
🍅இரத்த சோகையை தடுக்கிறது..
🍅உடல் எடையை குறைக்க செய்யும்.
🍅இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
🍅செல்களுக்கு புத்துணர்ச்சியை உண்டாக்கும்..