சுவை மிக்க சிக்கன் ஊறுகாய்
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 200கிராம்
கடுகு - 1/2 ஸ்பூன்
பூண்டு - 6
இஞ்சி - ஒரு இன்ச்
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 100
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
🍅எலும்பில்லாத சிக்கனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
🍅தண்ணீர் விட்டு நன்கு சிக்கனை அலசி ஒரு வடியில் போட்டு தண்ணீர் வடியும் வரை வைத்திருக்கவும். மிக்ஸி ஜாரில் சிக்கனை போட்டு pulse mode-ல் ஒரு தடவை விட்டு எடுக்கவும்.
🍅சிக்கனுக்குள் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.
🍅வாணெலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,கலக்கி வைத்த சிக்கனை போட்டு பொரித்து தனியாக ஒரு தட்டில் போடவும்..
🍅தண்ணீர் சேர்க்காமல் இஞ்சி, பூண்டை போட்டு அரைத்துக் கொள்ளவும்.
🍅வாணெலியில் அதே எண்ணையில் கடுகு போட்டு வெடித்ததும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
🍅அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு தொக்கு போல் வதக்கவும்.
🍅பின்பு அதனுடன் சிறிது 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், சீரக தூள், கரம் மசாலா, மல்லி தூள், மிளகாய் தூள் போட்டு வதக்கவும்.. வறுத்த சிக்கனை போட்டு கிளறவும்.. எலுமிச்சை பழச்சாற்றை விட்டு கிளறவும்.
(கார சாரமாக வேண்டும் என்றால் மிளகாய் தூள் கொஞ்சம் அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.. )
சப்பாத்தி, பூரி, நாண்-க்கு ஏற்றது..
சுவையான சிக்கன் ஊறுகாய் தயார்