சத்துள்ள சுவையான தினை தோசை செய்முறை

 சத்துள்ள சுவையான தினண தோசை செய்முறை

      

                சிறு    தானியங்களில்    ஒன்று திணை   ஆகும். உலகில்   அதிகம்  பயிரிடப்படுகிறது..    இதில் ஏராளமான     சத்துக்கள்  அடங்கியுள்ளன.   மக்களால்   விரும்பு    உண்ணக்கூடியவை.  நார்ச்சத்து    அதிகம்   உள்ளது.. 


தேவையான பொருட்கள்


திணை                        -  1 கப்
காய்ந்த மிளகாய்  -   4
துவரம்பருப்பு      -   1/4கப்
உப்பு                              -  தேவைக்கேற்ப
எண்ணெய்            -  தேவையானவை


செய்முறை

           🍅 திணையும்   துவரம் பருப்பையும்  ஒன்றாக   ஒரு  பாத்திரத்தில்  போட்டு தண்ணீர்    விட்டு    அலசி மீண்டும்   தண்ணீர்    ஊற்றி    இரண்டு  மணி நேரம்  ஊற  போடவும். 

             🍅ஊறிய  பின்பு  அதில்  இருக்கும்    தண்ணீரை  வடித்து   விட்டு  அதனுடன்  காய்ந்த   மிளகாய், உப்பு  சேர்த்து  தோசை  மாவு  பதத்தில்  அரைத்து  எடுக்கவும். 

            🍅 அடுப்பில்  தோசை  தவாவை  வைத்து அதில்  எண்ணெய்  தடவி, அரைத்து  வைத்துள்ள  மாவை  மெல்லியதாக  தோசை  வார்க்கவும். 
சுற்றிலும்  எண்ணெய்  விட்டு, இரண்டு  பக்கமும்  திருப்பி  போட்டு  எடுக்கவும்... 
      
          🍅எள்  சேர்த்து  அரைத்த  மிளகாய் பொடியை  சிறிது  நல்லெண்ணெய்  கலந்து  தோசையை  தொட்டு   சாப்பிட்டால்   சுவையாக  இருக்கும்.. 


சுவையான சத்துள்ள  திணை தோசை தயார்


திணையின் நன்மைகள்:

மூளை ஆரோக்கியம் பெறும்.. 

எலும்புகள் வலிமை பெறும்.. 

சர்க்கரை நோயை குணமாக்கக் கூடியது..

மாதவிடாய் பிரச்சினை சரி செய்யக் கூடியது..


சிறுநீரக பிரச்சினை சரி செய்யக் கூடியது


அலர்ஜி போக்கும்


தசைகள் வழுப் பெறும்..

ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்கும்..


இருதயத்தை பலப்படுத்தும்...


ஞாபக சக்தியை மேம்படுத்தும்..

மலச்சிக்கல் நோய்க்கு சிறந்த நிவாரணி.. 
இன்னும்  ஏராளம்... 


""அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு""


Post a Comment

Previous Post Next Post