சுவையான முட்டை வறுவல் செய்வது எப்படி?

 சுவையான முட்டை வறுவல் 

தேவையான பொருட்கள்

முட்டை                        - 2-3

எண்ணெய்           -1 1/2 மேஜைக்கரண்டி

மஞ்சள் தூள்         -  1/2 ஸ்பூன்

மிளகு                          - 1 1/2 ஸ்பூன்

உப்பு                            - தேவையானவை

பெ. வெங்காயம்- 1

மிளகாய் தூள்      -  1/2 தேக்கரண்டி

(காஷ்மீர்) 

தக்காளி                      -  1


செய்முறை

                 

                  🍁ஒரு     பாத்திரத்தில்   தண்ணீர்    ஊற்றி    முட்டையை  போட்டு   சிறிது   உப்பு    போட்டு    வேக விடவும்.. ( உப்பு சேர்த்து வேக விட்டால் முட்டையின்  ஓடு  ஒட்டாமல்  எளிதில் வரும்). 

             

                  🍁முட்டை   வெந்தவுடன்  அதனுடன்   ஓட்டை   எடுத்துவிட்டு  இரண்டாக   நறுக்கி  வைக்கவும். 

                   

                     🍁வாணெலியில்  எண்ணெய்    விட்டு  1/4 ஸ்பூன்  மஞ்சள் தூள்,  உப்பு,   1 ஸ்பூன் மிளகு  தூள்   போட்டு   அடுப்பை   சிம்மில் வைத்து   அதில்  முட்டையை  போட்டு இரண்டு    பக்கமும்  திருப்பி போட்டு எடுக்கவும். 

                   

                       🍁அதே  வாணெலியில்  அதில்   இருக்கும்   எண்ணெயில்  பெரிய   வெங்காயம்   பொடியாக   நறுக்கியதை    போட்டு    வதக்கவும்.. மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மிளகு தூள்,   உப்பு     சேர்த்து அதனுடன்  வதக்கவும்.. 

                  

                    🍁தக்காளியை   அலசி  மிக்ஸி    ஜாரில்   போட்டு     அரைத்து  விழுதாக்கி    வெங்காயம்    வதக்கும்  வாணெலியில்    ஊற்றி  சிறிது தண்ணீர்    தெளித்து  அடுப்பை சிம்மில்  வைத்து  வேக விடவும்.      

  

                   

              🍁தக்காளியை  வதங்கி  தொக்கு  போல வரும், கிரேவி போல்  தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றி வதக்கவும்  இல்லையென்றால்  தேவையில்லை ..ஆயில்  ப்ரை  செய்த முட்டையை அதனுடன் வைத்து  கலந்து  விடவும்.. தேவைப்பட்டால்  கொத்தமல்லி இலையை  தூவி  பரிமாறவும். 


சுவையான  முட்டை  வறுவல் தயார்

Post a Comment

Previous Post Next Post