சத்துள்ள சேனைக்கிழங்கு கூட்டு செய்வது எப்படி?

 சேனைக்கிழங்கு கூட்டு


தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு           - 1/4 கப்

மஞ்சள் தூள்              - 1 சிட்டிகை

சேனைக்கிழங்கு     - 1 கப்

சின்ன வெங்காயம்- 4-6

ப. மிளகாய்                  - 2

சாம்பார் பொடி           - 1 1/2 ஸ்பூன்

உப்பு                                - தேவைக்கேற்ப


தாளிக்க

கடுகு                               - 1/4தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு    - 1 தேக்கரண்டி

சீரகம்                               - 1/4தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 1

எண்ணெய்                 - 1 1/2 தேக்கரண்டி


செய்முறை

                    

               🍁ஒரு  பாத்திரத்தில்  துவரம் பருப்பை  போட்டு   அலசி   கொஞ்சம்  தண்ணீர்  விட்டு மஞ்சள்  தூள் போட்டு  வேக  விடவும்.. 

                          

             🍁சேனைக்கிழங்கை  தோல்  நீக்கி  சிறு  சிறு  துண்டுகளாக  நறுக்கி  அலசிக்  வைத்துக் கொள்ளவும். 


                    

                🍁வெங்காயத்தை  பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை  நீளவாக்கில்  கீறிக் கொள்ளவும்.. 

                 

                🍁நறுக்கிய  சேனைக்கிழங்கு   துண்டுகள், பொடியாக  நறுக்கிய வெங்காயம்,     ப. மிளகாய், சாம்பார் பொடி   ஆகியவற்றை பருப்புடன் சேர்த்து உப்பு  தூவும். 

                

 🍁வாணெலியில் எண்ணெய்  விட்டு காய்ந்ததும்,   தாளிப்பவற்றை       போட்டு   தாளித்து  கூட்டில் சேர்த்து கலக்கி  கொதித்ததும்  இறக்கி வைக்கவும்   

               

🍁  இது  சாதத்துடன், சப்பாத்தியுடனும் சாப்பிடுவதற்கு   சுவையாக இருக்கும்


சேனைக்கிழங்கின்  பயன்கள்

🍁இதில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, பொட்டாசியம், இரும்பு சத்து... 

🍁இரத்த அழுத்தத்தை குறைக்கும். 

🍁உடல்  எடையை குறைக்க  உதவுகிறது. 

🍁மூல நோய்  சரி செய்ய உதவுகிறது. 

🍁வெள்ளைபடுதளுக்கு  சிறந்த  மருந்து. 

🍁கல்லீரல்  இயக்கத்தை   சீராக வைக்க உதவுகிறது. 

🍁எலும்பு  வலிமை பெற.. 

🍁பசியின்மை  பிரச்சினையை  சரி செய்ய உதவும். 

Post a Comment

Previous Post Next Post