கொழுமிச்சை சாதம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
கொழுமிச்சை - 4
கடலை எண்ணெய் - 2மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 200கி
கா. மிளகாய் - 3-5
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
பொன்னி அரிசி - 1 1/2 கப்
செய்முறை
🌹1 1/2 கப் அரிசியை தண்ணீர் விட்டு அலசி 3 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் விசில் விட்டு எடுத்து வைக்கவும்..
🌹கொழுமிச்சை பழத்தை இரண்டாக அருத்து அதை ஒரு கப்பில் சல்லடை வைத்து பிழிந்து கொள்ளவும்..
🌹சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.. (இதற்கு சின்ன வெங்காயம் சேர்த்துக் கொண்டால் சுவையாக இருக்கும்). வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் கடலைப்பருப்பு , சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்..
🌹வதங்கியவுடன் மஞ்சள் தூள், கொழுமிச்சை சாறு ,உப்பு சேர்த்து கொதிக்க விடவும். (கொழுமிச்சை இனிப்பாகவும், புளிப்பாகவும் இருக்கும்.. புளிப்பு என்றால் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.)
🌹குக்கர் மூடியை நீக்கி சாதத்தில் எண்ணெய் ஊற்றி கிளறி அதற்குள் வாணெலியில் கொதித்த கொழுமிச்சை சாற்றை ஊற்றி கிளறவும்.
(தேவைபட்டால் வறுத்த நிலக்கடலை சேர்த்து கிளறவும்)
பயன்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..
ஜலதோஷத்திற்கு நல்லது..
உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்..
வைட்டமின் சி அதிகம் உள்ளது.
செரிமானத்தை அதிகரிக்கும்....