இனிப்பு எள்ளு சாதம்
தேவையான பொருட்கள்:
எள்ளு - 1/2 கப்
சாதம் - 3 கப்
வெல்லம் - 50கிராம்
காய்ந்த மிளகாய் - 8
பெருங்காயம் - 1டீஸ்பூன்
கடுகு - 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
கடலை எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
உப்பு -தேவையானவை
செய்முறை
எள்ளைக் களைந்து சுத்தம் செய்து, அதை உலர்த்திக் கொள்ளவும்.
வெள்ளை எள்ளை விட கருப்பு எள்ளு சத்துள்ளது.
வாணெலியில் கடலை எண்ணெயை விட்டு எள்ளை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வறுக்கவும்.. படபடவென பொரியும் வரை வறுக்கவும்.
மற்றோரு வாணெலியில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.
இதனை எள்ளுடன் சேர்த்துக் கொள்ளவும்.. பின்னர் இதனுடன் வெல்லம் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்..
வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கிள்ளிய காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து ரெடியாக வைத்துள்ள வடித்த சாதம், வறுத்துப் பொடித்த பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்தக் கலவையை அகலமான பாத்திரத்தில் கொட்டி ஒரு சேர கலந்து பரிமாறவும்..
வறுத்த நிலக்கடலையை தோல் நீக்கி சாதத்தில் போட்டும் கிளறலாம் ( optional).. மேலும் சுவை கூடும்..
சத்துள்ள எள்ளு சாதம் தயார்
எள்ளின் நன்மைகள்:
இரும்புச் சத்து அதிகரிக்கும்..
இரத்த அழுத்தம் குறைய..
எலும்பு வளர்ச்சி அடையும்..
இரத்த உற்பத்தியாகும்..
உடல் எடை அதிகரிக்க உதவும்..
புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது..
இள நரையை தடுக்கும்..