சத்துள்ள முருங்கை கீரை தோசை செய்யும் முறை

 சத்துள்ள முருங்கை கீரை தோசை


ஏராளமான    சத்துக்கள்   நிறைந்த கீரைகளில்   முக்கிய   பங்கு   வகிக்கிறது முருங்கை கீரை..   குழந்தைகள்   அதிகம் இக்கீரையை   உட்கொள்ளுவதில்லை.. இதனை   தோசை   வடிவில்   செய்து கொடுத்தால்   மிகவும்   விரும்பி சாப்பிடுவார்கள்..   வாரம்    இருமுறை  செய்து  கொடுக்கலாம்... 


தேவையான பொருட்கள்

முருங்கை கீரை          - ஒரு கைப்பிடி

சின்ன வெங்காயம் - 10-15

சீரகம்                                     - 1தேக்கரண்டி

கறிவேப்பிலை           - ஒரு கொத்து

உப்பு                                     - தேவையானவை

தாளிக்க

எண்ணெய்                  -  1 மேஜைக்கரண்டி

கடுகு                                   - 1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு       -  1 தேக்கரண்டி

பெ. வெங்காயம்       -  1-2


செய்முறை


முருங்கை கீரையை  குச்சியில்லாமல்  இலைகளை  மட்டும் தண்ணீர் விட்டு  அலசி எடுத்துக் கொள்ளவும்.. 


சின்ன வெங்காயத்தை  தோல்  உரித்து  எடுத்து வைக்கவும்.. 


மிக்ஸி  ஜாரில்  முருங்கை கீரை  ஒரு  கைப்பிடி, சின்ன வெங்காயம், சீரகம், மிளகு, கறிவேப்பிலை போட்டு நைசாக  அரைத்துக்  கொள்ளவும். 


(முருங்கை கீரையை  அதிகம் சேர்த்து தோசை  வார்த்தால் கச்ச மாதிரி  இருக்கும். காரம் அதிகம் வேண்டும் என்றால்  மிளகை சிறிது  கூடுதலாக சேர்த்துக்  கொள்ளலாம்).. 


அரைக்கிலோ  தோசை மாவை எடுத்து  அதற்குள் அரைத்த  கலவையை ஊற்றி கலக்கிக் கொள்ளவும். 


வாணெலியில் எண்ணெய் ஊற்றி  காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பு , பொடியாக  நறுக்கிய  பெரிய வெங்காயத்தை  வதக்கி தோசை மாவிற்குள் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி  வைக்கவும்.. தண்ணியாக கரைத்துக்  கொள்ளவும்.. 


அடுப்பில் தோசை  தவாவை வைத்து  சூடானதும்  முருங்கை கீரை மாவை அதில்  வார்த்து 1ஸ்பூன்  எண்ணெய் விட்டு வேக விடவும்.. (அடுப்பை மீடியமாக வைத்து தோசை வார்த்தால் மொறு மொறுப்பாக இருக்கும்.. சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்). தோசையை  திருப்பி  போட்டு வேக விட்டு எடுக்கும்.. 


முருங்கை கீரை தோசைக்கு  தேங்காய் சட்னி சூப்பர் காம்பினேஷன்.. 


முருங்கை கீரையின் பயன்கள்


இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.. 


முடி வளர்ச்சியை தூண்டக் கூடியது..

 

கண் பார்வை தெளிவு பெறும்... 


மலச்சிக்கலை தடுக்க  உதவும்.. 


தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவுகிறது.. 


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.. 


எலும்புகள் மற்றும் பற்கள்  வலு பெறும்.. 


தாய்பால்  சுரக்கும்.. 


இரத்தம் சுத்தமாகும்... 


மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை  உண்டு வந்தால் உடல் தேறும்......... 


Post a Comment

Previous Post Next Post