அப்பக்கோவை இலை என்பது கொடி வகையை சேர்ந்தது.. பார்ப்பதற்கு கோவ இலையை போன்றே இருக்கும்.. எளிய முறையில் இதனை தொட்டியில் வைத்து வளர்க்கலாம் ...இக்கீரையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, டி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. ஜலதோஷத்திற்கு இது ஒரு அருமருந்து... இதனுடைய பூக்கள் சிறிதாக மஞ்சள் நிறமாகவும், பழங்கள் பழுத்து சிவப்பு நிறமாகவும் அமைந்துள்ளது. இதனுடைய இலையை பறித்து கசக்கினால் சாறு வரும், அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சளி தொந்தரவுகள் சரியாகும்..
எளிமையான சுவையான சத்துள்ள அப்பக்கோவை இலை சட்னி செய்முறை
தேவையான பொருட்கள்
அப்பக்கோவை இலை - 1கைப்பிடி
சின்ன வெங்காயம் - 10-15
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மிளகு - 5-10
சீரகம் - 1ஸ்பூன்
தேங்காய் - 1 மூடி
உப்பு - தேவையான
புளி - 2 கொட்டை
பூண்டு - 4-8
கடலை எண்ணெய் - தேவையான வை
கடுகு - 1/2 ஸ்பூன்
செய்முறை
🌹அப்பக்கோவை இலை பறித்து தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ளவும்.
🌹 சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்து வைக்கவும்..
🌹 வாணெலியில் கடலை எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, சீரகம், மிளகு போட்டு வதக்கவும்.
🌹வதக்கிய பின் மிக்ஸி ஜாரில் போடவும்.. வாணெலியில் எண்ணெய் விட்டு அப்பக்கோவை இலையை போட்டு வதக்கவும்.. இதனையும் மிக்ஸி ஜாரில் போடவும். . தேங்காய் 1/2 மூடி, உப்பு, புளி போட்டு தண்ணீர் விட்டு அரைக்கவும்..