எளிமையான கிச்சன் டிப்ஸ்

 எளிமையான கிச்சன் டிப்ஸ்


                 ☘ தேங்காய் துருவலை கொதிக்கும் நீரில் போட்டு  வைத்துவிட்டு  பிறகு கைப்பொறுக்கும்  சூட்டில்  எடுத்து பிழிந்தால்  நல்ல  கெட்டியான  பால்  கிடைக்கும்..


                       தேங்காய் கண்  பகுதியை  மேல் நோக்கியவாறு  வைத்தால், நீண்ட  நாள்  வரை  கெட்டு  போகாமல்  இருக்கும். 

                    

                      பாலெடு, தயிர்  ஏடுகளை  பாட்டிலில் போட்டு   குலுக்கினால் வெண்ணெய் தனியாக, மோர் தனியாக  வந்து விடும்... 


                ☘ காலிஃப்ளவர்  உணவு  வகைகளை  தயாரிக்கும்போது , அதில்  கொஞ்சம் பால் சேர்த்தால்  பச்சை வாசனை போய், சுவை  கூடுதலாக  இருக்கும்... 


               வெங்காய  பக்கோடாவுக்கு  1/2  டீஸ்பூன்  சோம்பு  மற்றும் கறிவேப்பிலை  கொஞ்சம் சேர்த்தால்  வாசனை  கூடும்...

                 ☘ முருங்கைக்கீரையை சமைக்கும்போது , கொஞ்சம் சர்க்கரை சேர்த்து வேக விட்டால், ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் உதிரியாக இருக்கும்.. 

                  ☘ மாவு அரைக்கும் போது வேகவைத்த சாதத்தை சிறிது அளவு சேர்த்து அரைத்தால் தோசை வார்க்கும் போது மிருதுவாக இருக்கும்... 

                   கீரை  நிறம் மாறாமல் இருக்க உப்பு சேர்த்து வேக விடவும். 

                              சாம்பார்  தண்ணீராக இருந்தால், பொட்டுக்கடலையை  மிக்ஸியில் அரைத்து சாம்பாரில்  சேர்க்கலாம், சாம்பார் கெட்டிப்படுவதுடன் சுவையும் கூடுதலாக இருக்கும்... 


                         ☘ வறுத்த   புழுங்கல்  அரிசியை மாவாக்கி  வைத்துக்கொண்டால், கூட்டுக்கறிகள்  இறக்கும்போது   லேசாகத் தூவிவிட்டால்  வாசனை  கூடுதலாக இருக்கும்... 


                            சாதம் குழைந்துவிட்டால் , எலுமிச்சை சாறு பிழிந்து, பிறகு  சாதம் வடித்தால்  , சாதம் பூப்போன்று  இருக்கும்... 


                             உளுந்து  வடைக்கு  அரைக்கும் போது, ஒரு  கைப்பிடி  சாதத்துடன்  அரைத்தால்  வடை மொறு மொறுப்பாக இருக்கும்... 


Post a Comment

Previous Post Next Post