எளிமையான சுவைமிக்க மொறு மொறுப்பான ரவை ரெஸ்பி

 எளிமையான சுவைமிக்க மொறு மொறுப்பான ரவை ரெஸ்பி

ரவை வைத்து ஏராளமான  இனிப்பு மற்றும் காரமான பலகாரம்  செய்யலாம்...ரவாவில் எண்ணற்ற பயன்கள் உள்ளன..எளிதில் குறுகிய  நேரத்தில் சுவைமிக்க  ஸ்நாக்ஸ் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.. 


காரசார மொறு மொறு ரவை ஸ்நாக்ஸ் ரெஸ்பி


தேவையான பொருட்கள்

ரவை                          - 1 கப்

மிளகாய் தூள்  - 1 ஸ்பூன்

ஓமம்                          - 1/4 ஸ்பூன்

மிளகு தூள்         - 1/2ஸ்பூன்

தண்ணீர்               - தேவையானவை

உப்பு                            - தேவைக்கேற்ப

எண்ணெய்          - தேவையானவை

கறிவேப்பிலை  - சிறிதளவு( optional) 

கொ. இலை           - சிறிதளவு(optional) 

அரிசி மாவு             - 1 -2 ஸ்பூன்


செய்முறை

                 🌹ரவையை வறுக்கக் கூடாது.. பச்சையாக எடுத்துக் கொள்ளவும்.. 

                

                 🌹மிக்ஸி ஜாரை  எடுத்து  அதில் எடுத்து வைத்திருக்கும்  ரவையை போட்டு பவுடராக  அரைத்துக்  கொள்ளவும்.. அதனை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.. 

                     

                   🌹அதனுடன்  1/2 ஸ்பூன்  மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் மிளகு தூள், 1/2 ஸ்பூன் ஓமம், அரிசி மாவு, உப்பு, பொடியாக நறுக்கிய  கறிவேப்பிலை சிறிது, பொடியாக நறுக்கிய  கொத்தமல்லி இலை சிறிது  வை அனைத்தையும் நன்கு கலந்து விட்டு , தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி  மாவு பிசைவது போல் பிசைந்து மூடி வைக்கவும்.. 


(ஓமத்தை பவுடராகவும் சேர்க்கலாம் அல்லது கையில்  தேய்த்தும் சேர்க்கலாம், மணமாக இருக்கும்.               * மிளகு பிடிக்காதவர்கள் மிளகாய்த்தூளை கூடுதலாக சேர்த்துக் கொள்ளவும்..                                      * மிளகாய் தூளை சேர்க்க பிடிக்காதவர்கள் மிளகாயை நைசாக அரைத்து சேர்க்கலாம்) 

                     

                   🌹10- 15 நிமிடங்கள் கழித்து  மூடி வைத்திருக்கும் மாவை மீண்டும் பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்..

                    

                    🌹பூரிக் கட்டை அல்லது கல்லில் எண்ணெய் விட்டு  உருண்டை வைத்து தேய்த்து  தேவையான வடிவத்தில் கட் செய்து கொள்ளவும்.

                       

                 🌹வாணெலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்  கட் செய்துள்ள துண்டுகளை போட்டு  நுரை அடங்கும் வரை விட்டு எடுக்கவும்.. 


சுவையான  மொறு மொறு  ரவை ஸ்நாக்ஸ் தயார்


ரவையின் பயன்கள்

இரும்பு சத்து நிறைந்து உள்ளன. 

இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.. 

இதய நலத்திற்கு உதவுகிறது.. 

நரம்பு மண்டலத்திற்கு சிறந்தது.. 

ரத்தசோகையை சரி  செய்யும்.  

மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும். 

கெட்ட  கொழுப்பை குறைக்கக் கூடியது.. 


Post a Comment

Previous Post Next Post