இனிப்புகளில் முதன்மை இடத்தில் இருப்பது லட்டு...பல விதங்களில் லட்டு செய்யலாம்..அதில் ஒரு முறையை பற்றி கீழ் வரும் செய்முறையில் காண்போம்.
சுவையான பூந்தி லட்டு செய்முறை
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1/2கி
தண்ணீர் - 1 டம்ளர்
ஆயில் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 1 கிலோ
முந்திரி - 15-20
திராட்சை - 15-20
கிராம்பு - 4-6
ஏலக்காய் - 5-6
நெய் - 1தேக்கரண்டி
செய்முறை
🌹 நல்ல பிராண்ட் கடலை மாவை தேர்வு செய்து சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.. (கடலைப்பருப்பை வாங்கி மெஷினில் கொடுத்தும் அரைத்து லட்டு செய்யலாம், சுவையாக இருக்கும்) .
🌹சலித்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்..
🌹வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் லட்டு தேய்க்கும் கரண்டியில் தேய்த்து விட்டு திருப்பி போட்டு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.. (ரொம்ப நேரம் எண்ணெயில் விட்டால் பூந்தி முருகி விடும்).
🌹மாவு அனைத்தையும் எண்ணெயில் தேய்த்து எடுத்த பிறகு வேறு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1கிலோ சர்க்கரை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.. (தண்ணீர், சர்க்கரை முழுகும் வரை இருக்க வேண்டும்).
🌹 சர்க்கரை கரைந்து ஜீரா கொதித்து ஒரு கம்பி பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும்.. (ஒரு கம்பி பதம் என்றால், பாவு கொதிக்கும் போது இரண்டு விரலால் தொட்டு விரித்தால் நூல் போல் வரும்).
🌹ஜீரா தயாரானவுடன் மூடி வைத்திருக்கும் பூந்திக்குள் எடுத்து ஊற்ற வேண்டும்.. கரண்டியோ அல்லது குச்சியோ வைத்து பூந்தியை நன்கு கிளறி விட்டு மீண்டும் தட்டை வைத்து மூடி விடவும்..ஒரு 5 நிமிடம் விட்டு(பூந்தி நன்கு ஊறி இருக்கும்)தட்டை மீண்டும் எடுத்து கிளற வேண்டும்..பூந்தி நன்கு உடைந்திருக்க வேண்டும்).
🌹கிராம்பு, ஏலக்காய் இரண்டையும் பொடி செய்து ஜீரா பூந்தியில் சேர்க்கவும்..
🌹வாணெலியில் ஒரு கரண்டி நெய் விட்டு முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து ஜீரா பூந்தியில் சேர்க்கவும்.
🌹அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு உருண்டை பிடிக்கவும். (ஈரக்கக் கையால் உருண்டை பிடிக்கக் கூடாது. லட்டு கெட்டு விடும்)..
சுவைமிக்க டேஸ்டியான பூந்தி லட்டு தயார்..