நிலக்கடலை சட்டினி செய்வது எப்படி?

நிலக்கடலை சட்டினி செய்வது எப்படி? 

தேவையான  பொருட்கள்:

நிலக்கடலை                    -      150கி
சின்ன வெங்காயம்      -      25கி
பூண்டு                                 -      5 பல்
காய்ந்த மிளகாய்           -      4
கறிவேப்பிலை                -     சிறிது
சீரகம்                                    -     1 தேக்கரண்டி
புளி                                        -     2கொட்டை
உப்பு                                      -    தேவையானவை
தேங்காய் துருவல்        -     50 கி
கடலை எண்ணெய்      -     1.5தேக்கரண்டி

செய்முறை:

🌷வாணெலியில் நிலக்கடலையை போட்டு வறுத்து எடுக்கவும். 

🌷வாணெலியில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, சீரகம், தேங்காய் துருவல் இவ்வணைத்தையும் போட்டு வதக்கி கொள்ளவும். 

🌷மிக்ஸியில் நிலக்கடலை, உப்பு,புளி மற்றும் வணக்கிய  பொருட்கள் அனைத்தையும் போட்டு சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். 

🌷சுவையான நிலக்கடலை சட்டினி ரெடி. 

இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு நன்றாக  இருக்கும்.. 

குறிப்பு:

தினமும் ஒரு கை பிடி அளவு  நிலக்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை. 

1.சர்க்கரை நோய்  குறையும்.. 
2.இருதய நோய் வராது. 
3.ஞாபக சக்தி அதிகரிக்கும்.. 
4.உடல் எடையை அதிகரிக்கும்.. 
5.எலும்பு வலிமை பெறும்.. 

Post a Comment

Previous Post Next Post