சுவையான மைசூர் பாகு செய்வது எப்படி?

🌺சுவையான மைசூர் பாகு செய்வது எப்படி? :

தேவையான பொருட்கள்:

கடலை மாவு        -        1 கப்

சர்க்கரை               -        2 1/2கப்

ஆயில்                    -        3/4 கப்

நெய்                        -        1/4கப்

தண்ணீர்                -         3/4 கப்


செய்முறை:

🌷நல்ல தரமான கடலை மாவை வாங்கி கொள்ளவும்.. 

🌷கடலை மாவுக்குள்  பாதி (அ) முக்கால் ஆயிலை ஊற்றி தோசை மாவு பதம் கரைக்கவும். 


🌷வாணெலியில் சர்க்கரை போட்டு தண்ணீர் ஊற்றி காய்ச்ச  வேண்டும்.. 

🌷சர்க்கரை கரைந்து நன்றாக கொதி வரும்போது கரைத்து வைத்துள்ள கலவையை(எண்ணெய்+கடலை மாவு) ஊற்ற வேண்டும்.. 

(*கம்பி பதம் தேவையில்லை

🌷வேறு அடுப்பில் நெய்யும், மீதம் உள்ள எண்ணெயும் சுடு பண்ணவும் (அடுப்பை சிம்மில் வைக்கவும்).. 

🌷கடலை மாவு கலவையை கொதி வரும் போது கொஞ்சம் கொஞ்சமாக சூடான எண்ணெய்+நெய் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.. (விடாமல் கிளறிக் கொண்டு இருக்க வேண்டும் இல்லையென்றால் அடி பிடித்து விடும்) . 

🌷 Tray  அல்லது தட்டில் எண்ணெய் தடவிக் கொள்ளவும்.. 

🌷மைசூர் பா சுருண்டு வரும்போது எடுத்து  Trayயில் ஊத்தவும்.. 

🌷சிறிது சூடு இருக்கும் போதே துண்டுகள் (piece) போடவும்.. 

   🍀 சுவையான மைசூர் பாகு  தயார்🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀


Post a Comment

Previous Post Next Post