Homemade சோப்பு செய்வது எப்படி?

☘குப்பைமேனி  சோப்பு☘

தேவையான பொருட்கள்:

காஸ்டிக்  சோடா           -  1 கப்
தண்ணீர்                         -   2கப்
மரச்செக்கு தேங்காய் 
எண்ணெய்                     -    61/2 கப் 
குப்பைமேனி  சாறு      -    1/2 கப்
வாசனை திரவியம்      -   5 gm
      (Perfume) 
செய்முறை🥀
(சில்வர் பாத்திரம் பயன்படுத்தவும்) 

🌾ஒரு பாத்திரத்தில் 1கப் தண்ணீர் ஊற்றி, காஸ்டிக் சோடா வை போடவும்.. 
( காஸ்டிக் சோடாவை போட்டு தண்ணீர் ஊற்றக் கூடாது) 

🌾தண்ணீருடன் காஸ்டிக் சோடாவை கலக்கும் போது  heat   வரும். 
(Use mask, hand glouse and spectacles to avoid irritation

🌾காஸ்டிக் சோடாவை கரையும் வரை கலக்கி ஆற விட்டு( room temperature) , வடியில் வடித்து எடுக்கவும்.. 

🌾தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.. 

🌾 குப்பைமேனியின் இலையை அரைத்து சாறு எடுத்து 1/2கப் ஊற்றி கலக்கவும்.. 
🌾வாசனை திரவியம் சேர்த்து கலக்கவும். 

🌾தோசை மாவு பதம் வரும் வரை கலக்கவும். 

🌾சோப்பு அச்சில்(soap mould) ஊற்றி வைக்கவும்.. 

🌾48 மணி நேரம் கழித்து அச்சில் இருந்து எடுக்கலாம்.. 


          குப்பைமேனி சோப்பு தயார்

பயன்கள்;
🌷தேவையற்ற ரோமங்களை அகற்றி நல்ல பொலிவை தரும்.. 

🌷தேமல், கரும்புள்ளியை நீக்கும். . 

🌷தோலில் ஏற்படும் அரிப்பு, , புண்,  சொறி ஆகியவை சரியாகும்.. 

குறிப்பு:

35 நாட்களுக்கு பிறகு சோப்பை பயன்படுத்தவும்... 

Post a Comment

Previous Post Next Post