பூண்டு பொடி செய்வது எப்படி❓
தேவையான பொருட்கள்:
பூண்டு - 150 கி
துவரம் பருப்பு - 100 கி
பாசிப்பருப்பு - 100 கி
காய்ந்த மிளகாய் - 8-10
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை:
🌹வாணெலியில் துவரம் பருப்பை போட்டு வறுக்கவும்.. அதை எடுத்து ஒரு தட்டில் போடவும்.
🌹பாசிப்பருப்பையும் வறுத்தெடுக்கவும்..
🌹சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயை போட்டு வறுத்தெடுக்கவும்.
🌹கறிவேப்பிலை போட்டு மொறு மொறு வென்று வறுத்தெடுக்கவும்.
🌹சிறிது எண்ணெய் ஊற்றி பூண்டு போட்டு நன்றாக வதக்கவும்..
🌹ஆற வைத்து மிக்ஸியில் பருப்பு, மிளகாய், உப்பு, கறிவேப்பிலை போட்டு அரைக்கவும்.
🌹கடைசியாக பூண்டை போட்டு அரைக்கவும்..
எண்ணெய் கொஞ்சமாக ஊற்றி வறுக்கவும்.. அதிகம் சேர்த்தால் பொடி கட்டியாகிவிடும்..
பூண்டு பொடி ரெடி
பொடியுடன் நெய் கலந்து சாதம், இட்லி, தோசை இவ்வனைத்திற்கும் சுவையாக இருக்கும்..
பூண்டுவின் பயன்கள்:
ரத்த அழுத்தத்தை சரி செய்யும்..
சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்.
வாயுவை சரி செய்யும்.
ஜீரணத்தை சரி செய்யும்.
கொழுப்பைக் குரைக்கும்.......
Tags:
பூண்டு பொடி