அரிசி பருப்பு சாதம் செய்வது எப்படி?

 அரிசி பருப்பு சாதம் செய்வது எப்படி? 

தேவையான  பொருட்கள்:

ரிசி                                   -    2கப்

துவரம் பருப்பு                 -    1கப்

கடலை எண்ணெய்      -   1மேஜைக்கரண்டி

கடுகு                                    -   1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம்      -    150கி

கறிவேப்பிலை                -    சிறிது

பூண்டு                                  -    15 பல்

இஞ்சி                                   -    விரல் நீளம்

பட்டை                                   -      4

கிராம்பு                                -       4

சோம்பு                                 -   1தேக்கரண்டி

மிளகு                                   -  }1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்           -        4

மஞ்சள் தூள்                     -       1/4 தேக்கரண்டி

தக்காளி                              -        3

உப்பு                                      -        தேவைக்கேற்ப

வெண்ணெய்                   -        1 தேக்கரண்டி

கொத்தமல்லி இலை    -       சிறிது


செய்முறை:

🌹அரிசியும் ,பருப்பையும் ஒன்றாக தண்ணீர் விட்டு அலசிக் 1/2 நேரம் ஊற விடவும்.. 

🌹அரைக்க

பூண்டு, இஞ்சி, பட்டை, கிராம்பு, மிளகு, சோம்பு, மிளகாய், கறிவேப்பிலை அனைத்தையும் ஒன்றாக அரைக்கவும்.. 

🌹குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.. 

🌹அரைத்த மசாலா,தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். 

🌹வதக்கிய பின்னர் தண்ணீர் (5கப்) சேர்க்கவும்.. 

1கப் அரிசிக்கு - 2 கப் தண்ணீர்

1கப் பருப்பு      -  1 கப் தண்ணீர்

🌹தண்ணீர் கொதி வரும்போது அரிசியை போடவும்.. 


🌹வெண்ணெய், கொத்தமல்லி இலையை போட்டு குக்கரை மூடியிட்டு 2 விஸ்சில்  விட்டு இறக்கவும்.. 

🌷சுவையான அரிசிம் பருப்பு சாதம் தயார்

Post a Comment

Previous Post Next Post