கம்பு நூடுல்ஸில் டேஸ்டி மேக்கர்(masala pack) இல்லாம எப்படி சமைப்பது?
தேவையான பொருட்கள்:
கம்பு நூடுல்ஸ் - 1 பாக்கெெட்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
கடலை எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
கடுகு - 1தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2தேக்கரண்டி
கரம் மசாலா - 2 தேக்கரண்டி
முட்டை - 5
கொத்தமல்லி இலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
🌹ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சிறிது எண்ணெய் விட்டு கொதி வரும்போது நூடுல்ஸை போட்டு 3-4நிமிடம் விட்டு எடுத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
🌹ஒரு வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போடவும். நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் போட்டு வதக்கவும்..
🌹பின்பு தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, கரம் மசாலா அணைத்தையும் போட்டு நன்கு வதக்கவும்..
🌹அதற்குள் முட்டையை உடைத்து ஊற்றி பாதி வெந்தவுடன் நூடுல்ஸை போட்டு கிளற வேண்டும்.
🌹கடைசியாக கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும்..
சூடாக நூடுல்ஸை பறிமாறவும்.
குறிப்பு:
நூடுல்ஸில் உப்பு சேர்த்து இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு அதற்கு தகுந்தாற் போல் சேர்க்கவும்