சுண்டல்(கொண்டைக்கடலை) குருமா செய்வது எப்படி?


சுண்டல்(கொண்டைக்கடலை) குருமா செய்வது எப்படி? 

தேவையான பொருட்கள்:
சுண்டல்                           -      1 கப்
கடலை எண்ணெய்      -      3 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை              -     2
சோம்பு                              -    1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம்     -     2
ப. மிளகாய்                     -     2
தக்காளி                           -     2
மஞ்சள் தூள்                   -    1/2 தேக்கரண்டி
கரம் மசாலா                   -    1 1/2 தேக்கரண்டி
உப்பு                                  -    தேவைக்கேற்ப
பெருங்காயத்தூள்       -      சிறிது
புதினா                              -     5-10இலைகள்

அரைக்க:
தேங்காய் துருவல்        -    1 கப்
பூண்டு                                -     6 பல்
இஞ்சி                                 -     சிறு துண்டு
காய்ந்த மிளகாய்           -     2
முந்திரி                               -      5
சீரகம்                                   -      1/2 தேக்கரண்டி
கல்பாசி                              -      1

செய்முறை

🌷சுண்டலை 6மணி நேரம் ஊற வைத்து வேக  வைக்க வேண்டும்.. 

🌷வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத்தூள்,பிரிஞ்சி இலை, சோம்பு போட்டு பச்சை மிளகாய்,பெரிய வெங்காயம் (நீள வாக்கில் வெட்டி வதக்கவும்.. 

🌷அதனுடன் தக்காளி, மஞ்சள் தூள், கரம் மசாலா,புதினா, உப்பு  போட்டு வதக்கவும். 

🌷தேங்காய் துருவல், பூண்டு, இஞ்சி, சீரகம், காய்ந்த மிளகாய், முந்திரி, கல்பாசி  போட்டு நைசாக அரைக்கவும்.. அதனுடன் பாதி சுண்டலை  போட்டு கொர கொர வென்று அரைத்து வாணெலியில் ஊற்ற  வேண்டும்.. 

🌷மீதமுள்ள சுண்டலையும் வாணெலியில் குருமாக்குள் போட்டு கொதிக்க விடவும்.. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.. 

சப்பாத்திக்கும் பூரிக்கும் சுவையான குருமா தயார். . 

குறிப்பு:

சுண்டலை வேக வைக்கும் தண்ணீரை வீணாக்காமல் குருமாக்குள்  ஊற்றிவும்.. 

பயன்கள்:

1.செரிமானத்திற்கு நல்லது.. 
2.இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும்.. 
3.இதயம் வலு பெறும். 
4.நோய் எதிர்ப்பு சக்தி யை அதிகரிக்கும்.. 
5.சிறு நீர் பிரச்சனை சரியாகும்.. 

Post a Comment

Previous Post Next Post