கஷாயம் (ஜலதோஷம்) செய்வது எப்படி?

 (ஜலதோஷம்)கஷாயம் செய்வது எப்படி? 

தேவையான பொருட்கள்:

வெற்றிலை          -     2
துளசி                      -     10
கற்பூரவல்லி        -      2
இஞ்சி                     -      சிறு துண்டு
மிளகு                      -     10
சீரகம்                       -     1/2  தேக்கரண்டி
கிராம்பு                   -      5
தண்ணீர்                -      1 டம்ளர்
தேன்                        -      1/2  - 1 தேக்கரண்டி
செய்முறை:

🌷ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இஞ்சி,வெற்றிலை, துளசி, கற்பூரவல்லி இலைகளை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.. 

🌷மிளகு, சீரகம், கிராம்பு ஆகியவைகளை தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும்.. 

🌷தண்ணீர் கொதித்து பாதி ஆகும் வரை விட்டு இறக்கவும்.. 
  
🌷குழந்தைகளுக்கு தேன் கலந்து பருகக்  கொடுக்கலாம்.. 

குறிப்பு

இது குழந்தைகளுக்கு ஆன அளவு, பெரியவர்கள் அதிக படுத்திக் கொள்ளவும்.. 

பயன்கள்:

வெற்றிலை - சுவாச நோய்கள் சரியாகும்.. 
துளசி             - கோழையை அகற்றக் கூடியது. 
கற்பூரவல்லி- மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல் சரியாகும்.. 
மிளகு     -  சளி தொந்தரவுகள் நீங்கும். 
சீரகம்     -  சளி மற்றும் காய்ச்சலை போக்கும்.. 
இஞ்சி  -  இருமலைக் குறைக்கிறது.. 
கிராம்பு - மூக்கு ஒழுகுதல், தலைவலி சரியாகும். 
தேன்   -  வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி குணமாகும்.. 

Post a Comment

Previous Post Next Post