எளிமையாக தக்காளி சாதம் எப்படி செய்வது?

 எளிமையாக (வெஜ்)தக்காளி சாதம் எப்படி செய்வது? 

தேவையான பொருட்கள்:

அரிசி                                  -   2 கப்
கடலை எண்ணெய்    -              2மேஜைக்கரண்டி
கடுகு                                   - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம்     -  2
பச்சை மிளகாய்             -  3
கேரட்                                    -  2 பெரிய
பீன்ஸ்                                  -   6
மீல் மேக்கர் (அ) ப. பட்டாணி-1கப்
தக்காளி                            -   6
ஏலக்காய்                          -   4
முந்திரி                               -   6
பிரிஞ்சி இலை               -   2
ஸ்டார் அன்னாசி           -    3
புதினா                                -   சிறிது🌷
கொத்தமல்லி இலை  -     சிறிது
உப்பு                                  -   தேவைக்கேற்ப
மஞ்சள் தூள்                -    1/2தேக்கரண்டி
வெண்ணெய்               -   1 தேக்கரண்டி

அரைக்க
பூண்டு                                   -     10-15பல்
இஞ்சி                                    -     2விரல் துண்டு
பட்டை                                    -      4 
கிராம்பு                                 -      4
காய்ந்த மிளகாய்            -      6-8
சோம்பு                                  -  1தேக்கரண்டி
கறிவேப்பிலை                 -   சிறிது
சின்ன வெங்காயம்       -   100 கி

செய்முறை:

🌷அரிசியை தண்ணீர் ஊற்றி அலசி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். 
 
🌷குக்கரில் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை, ஏலக்காய்,ஸ்டார் அன்னாசி,முந்திரி,கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம்,
 ப. மிளகாய் போட்டு வதக்கவும்.. 

🌷அரைத்த மசாலாவை அதனுடன் சேர்ந்து நன்கு  வதக்கவும்.. 

🌷 தக்காளி, புதினா, கேரட், பீன்ஸ், மீல் மேக்கர் (அ) ப. பட்டாணி, உப்பு, மஞ்சள் தூள் கலந்து  வதக்கவும்.. 
🌷அனைத்தும் வதங்கியதும் தேவையான தண்ணீர் ஊற்றி கொதித்து வரும்போது அரிசியை போட்டு வேக விடவும் .. 

🌷அதனுடன் கொத்தமல்லி இலை சேர்த்து வெண்ணெய் போட்டு குக்கரை மூடி விசில் விடவும்.. 

சுவையான (வெஜ்) தக்காளி சாதம் தயார்.. 

குறிப்பு:

1 கப் அரிசிக்கு  2 கப் தண்ணீர் சரியான அளவு.. 
பழய அரிசி எனின் கொஞ்சம் அதிகம் சேர்க்கவும்.. 

Post a Comment

Previous Post Next Post