பீர்க்கங்காய் துவையல் செய்வது எப்படி?

 பீர்க்கங்காய் துவையல் செய்வது எப்படி?


 தேவையான பொருட்கள்;

பீர்க்கங்காய்                      -    1

கடலை எண்ணெய்        -    2 1/2தேக்கரண்டி

சின்ன வெங்காயம்      -     10

பெரிய வெங்காயம்      -      3

காய்ந்த மிளகாய்             -       3-4

கறிவேப்பிலை                  -      சிறிது

பூண்டு                                   -      6-7 பல்

சீரகம்                                      -     1 தேக்கரண்டி

புளி                                          -      4 கொட்டை

உப்பு                                        -      தேவைக்கேற்ப

தேங்காய்                              -     100கி

தக்காளி                                -      1-2


செய்முறை:

🌷வாணெலியில் எண்ணெய்(1தேக்கரண்டி)  ஊற்றி  வெங்காயம்,  மிளகாய்,  கறிவேப்பிலை பூண்டு,  சீரகம்,  தேங்காய் , தக்காளி போட்டு  வதக்கி  மிக்ஸியில்  போடவும்.. 


🌷பீர்க்கங்காயின்  நாரை  நீக்கி அரிந்து   வாணெலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வதக்கிக் கொள்ளவும்.. 

🌷வணக்கிய பொருளுடன்,உப்பு, புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.. 

🌷வாணெலியில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடும், கறிவேப்பிலை போட்டு தாளித்து துவையலில்  போடவும்.. 

சுவையான பீர்க்கங்காய் துவையல் தயார்

இட்லி, தோசையுடன் சுவையாக இருக்கும்.. 

பயன்கள்:

நார் சத்துக்கள் அதிகம் உள்ள காய்

கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

 சிறுநீரை பெருக்கும்.. 

இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உள்ளது. 

மஞ்சள் காமாலைக்கு இதன் சாறு மருந்தாக பயன்படுகிறது.. 














Post a Comment

Previous Post Next Post