சுவையான பாதுஷா செய்முறை
பாதுஷா என்பது ஒரு இனிப்பு வகையை சேர்ந்தது.. உண்மையில் செய்வதற்கு மிகவும் எளிதான இனிப்பு இது.
மைதா - 3கப்
சர்க்கரை - 1 1/2 கப்
வனஸ்பதி - 1 கப்
தயிர் - 1 மேஜைக்கரண்டி
சமையல் சோடா - 1/2 ஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
எண்ணெய் - தேவையானவை
செய்முறை
🌷ஒரு கிண்ணத்தில் தயிர் மற்றும் சமையல் சோடாவை போட்டு நன்கு நுரைக்க கரண்டியால் கலக்க வேண்டும்..
🌷ஒரு தட்டில் மைதாவைக் கொட்டி வனஸ்பதி உள்ள உருக்காமல் அப்படியே மைதா மாவில் சேர்த்து,தயிர் கலவையும் சேர்த்து பிசையவும்.
🌷எலுமிச்சையளவு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும். உள்ளங்கையில் நெய் தடவி ஒரு உருண்டை எடுத்து கொஞ்சம் போல் தட்டையாக்கி, அதன் நடுவில் கட்டைவிரலால் அழுத்தி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
🌷அடுப்பில் பாத்திரம் வைத்து பாகு காய்ச்சி பிசுக்கு பதத்தில் வைத்துக் கொள்ளவும்.
🌷வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்துள்ள உருண்டைகளை
போட்டு பொரித்து பாகுக்குள் போட்டு 10 நிமிடம் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
சுவையான பாதுஷா தயார்
பாதுஷா சாஃப்டாக வேண்டும் என்றால் பாகில் முக்கி எடுத்து வைக்கவும்.
குறிப்பு
மைதாவில் தண்ணீர் துளி சேர்த்தாலும் கூட பாதுஷா பக்குவம் மாறிப் போகும்.. இதழ் இதழாக வராமல் சாப்பிட கஷ்டமாக இருக்கும்..