முட்டை
முட்டையில் நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடியது முட்டை..முட்டையை வைத்து நிறைய ரெஸ்பிகள் செய்யப்படுகிறது...ஜிம்மில் ஒர்க்கவுட் செய்பவர்கள் வேக வைத்த முட்டையை எடுத்துக் கொள்வார்கள்..தோசை தவாவில் முட்டையை உடைத்து ஊற்றி (மஞ்சள் கரு உடையாமல்) உப்பு,மிளகு தூள் போட்டு திருப்பி போடாமல் எடுத்தால் ஆப்பாயில்..முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றி அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,கறிவேப்பிலை,கொத்தமல்லி, பச்சை மிளகாய் அல்லது மிளகு தூள்,உப்பு சேர்த்து கலந்து விட்டு ,தோசை தவாவில் எண்ணெய் தடவி முட்டை கலவையை ஊற்றி திருப்பி போட்டு வேக விட்டால் ஆம்லெட்.. முட்டையை வைத்து ஏராளமான ஐட்டம் செய்யப்படுகிறது..
முட்டை வறுவல், முட்டை பிரியாணி, முட்டை கிரேவி, முட்டை மசாலா, முட்டை பப்ஸ், முட்டை போண்டா... முட்டையை வைத்து கேக், ரொட்டி...
பலவிதமான பதார்த்தங்கள் முட்டையை வைத்து செய்யப்படுகிறது.. அதில் எளிமையாக, சுவையான முறையில் முட்டை சாதம் செய்முறை விளக்கத்தை பார்ப்போம்..
எளிமையான முறையில் சுவையான முட்டை சாதம் செய்முறை
தேவையான பொருட்கள்
முட்டை - 4-5
சாதம் - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 1பெரியது
இஞ்சி, பூண்டு விழுது- 1 ஸ்பூன்
கா. மிளகாய் - 2 - 3
கரம் மசாலா - 1 pinch
மஞ்சள் தூள் - சிறிது
மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1/2 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி இலை - சிறிது
உப்பு - தேவையான
எண்ணெய் -1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
செய்முறை
☘ ஒரு பாத்திரத்தில், எடுத்து வைத்திருக்கும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்..
☘ வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்த பிறகு கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை கிள்ளி சிறு துண்டுகளாக போட்டு கலந்து விடவும்.. மிதமான தீயில் வைத்து செய்யவும்..
☘ சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிய சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.. இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்..
☘ அதனுடன் ஒரு சிறிய தக்காளியை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.. பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.. எண்ணெயிலேயே வதங்க வேண்டும், தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும்.. எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி இலையை போட்டுக் கொள்ளவும்..
☘ முட்டையை உடைத்து கலக்கி வைத்திருக்கும் கலவையை அதனுடன் ஊற்றி கலந்து விடவும்.. 80 சதவிகிதம் வெந்தால் போதுமானது...
வேக வைத்த சாதத்தை அதனுடன் சேர்த்து கிளறி விடவும்.. அதனுடன் மிளகு தூள், கரம் மசாலா (pinch) சேர்த்து கலந்து விடவும்..
(தேவைப்பட்டால் கரம் மசாலா சேர்த்து கொள்ளலாம்.. It's optional)
☘ அனைத்தையும் நன்கு கலந்து விட்டு மூடி போட்டு மூடி 2 நிமிடங்கள் வைக்கவும்.. அடுப்பை சிம்மில் வைக்கவும்.. 2 நிமிடங்கள் கழித்து ,மூடியை திறந்து, கரண்டியால் கிளறி, பரிமாறலாம்..
சுவையான முறையில் முட்டை சாதம் தயார்
முட்டையின் பயன்கள்
☘ முட்டையில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது..
☘ கெட்ட கொழுப்பை குறைக்கிறது.
☘ முட்டையில் ஒமேகா 3 இருப்பதால் இதய பிரச்சினைகள் வராமல் காக்கிறது..
☘ மஞ்சள் கருவில் வைட்டமின் டி இருப்பதால் எலும்புக்கு வலிமை தரும்.
☘ முட்டை , உடல் எடையை குறைக்க உதவி செய்யும்..
☘ மூளை மற்றும் நரம்பு மண்டலம் திறம்பட செயல்பட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முட்டைகளில் உள்ளன..
☘ தினமும் முட்டை சாப்பிடுவதால் கண் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது..