எளிமையான முறையில் காளான் ரெஸ்பி

 காளான் கிரேவி செய்முறை விளக்கம்


                காளான்  என்பது  ஒரு  புஞ்சை தாவர  உயிரினம் ஆகும்..குளிர் காலத்தில் கிராமங்களில் வேலி ஓரங்களில் வளர்ந்து காணப்படும். இது இயற்கையானவை.. இதனை அரிசிக் காளான் என்று கூறப்படும். ஆனால்  இன்று  செயற்கை முறையில்  வீடுகளிலே  வளர்க்கப்படுகிறது.. இதனை  தொழிலாகவும்  செய்யப்படுகிறது..லட்சக் கணக்கில் சம்பாதிக்க செய்கிறார்கள்.

                  காளான்  சாப்பிட சுவையாகவும், மருத்துவ குணங்கள் உள்ளது.. பலவிதமான காளான்கள் உள்ளன.. அதில் மூன்று வகை  காளான்கள் மட்டும் இந்தியாவில் பயன்பாட்டில்  உள்ளன... அவை சிப்பிக்காளான், வைக்கோல்  காளான், மொக்குக் காளான்.. 

தேவையான பொருட்கள் 

காளான்                    -250கி

பெ. வெங்காயம்  -2

இஞ்சி                        -சிறு துண்டு

பூண்டு                        -7-10பல்

எண்ணெய்            -2 1/2தேக்கரண்டி

சீரகம்                          -1/4 தேக்கரண்டி

பிரிஞ்சி இலை    -1-2

கா மிளகாய்             -1

தக்காளி                    -2

மஞ்சள் தூள்          -1/4 ஸ்பூன்

மிளகாய் தூள்       -1 1/2 ஸ்பூன்

கரம் மசாலா           -1 ஸ்பூன்

உப்பு                             - தேவைக்கேற்ப

கொத்தமல்லி தூள்- 2 ஸ்பூன்

கொத்தமல்லி இலை -1 கைப்பிடி


செய்முறை

                   🌺  காளானை தண்ணீரில் அலசி இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 


                  🌺வாணெலியில் எண்ணெய் ஊற்றி  காளானை போடவும்..காளானில் இருக்கும் தண்ணீர் சுண்டும் வரை வதக்கவும். 


                  🌺மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு போட்டு அரைத்து வைத்துக்  கொள்ளவும். 

                   

                 🌺   வாணெலியில் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை, சீரகம் போட்டு அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து உப்பு போட்டு வதக்கவும். பொடியாக நறுக்கிய தக்காளியை  சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் வதக்கவும்.. 

                                   🌺அதனுடன்  மஞ்சள் தூள், காஷ்மீரி  மிளகாய் தூள், கரம் மசாலா, கொத்தமல்லி தூள் சேர்த்து கிளறி விடவும்..   


                   🌺ஒரு  கைப்பிடி  கொத்தமல்லி  இலையை  தண்ணீரில்  அலசி  மிக்ஸி  ஜாரில் போட்டு  தண்ணீர் விட்டு நன்கு  அரைத்துக்  கொள்ளவும்..காளானை சேர்த்து  கிளறி விட்டு, பின்பு  அரைத்து  வைத்துள்ள கொத்தமல்லி விழுதை  சேர்க்கவும்.. கிரேவிக்கு  தேவையான  தண்ணீர் சேர்த்து   கொதிக்க விட வேண்டும்.. 

சுவையான  காளான்  கிரேவி  தயார்

சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி இவ்வனைத்துக்கும  ஏற்ற   கிரேவி.. 


காளானின்  பயன்கள்;


🌺 மூட்டு வாதம்  உடையவர்களுக்கு  ஒரு  சிறந்த  நிவாரணம்.. 


🌺சர்க்கரை நோய்க்கு  ஒரு  சிறந்த மருந்தாக பயன்படுகிறது. 


🌺இதயத்தை  சீராக  வைக்க   உதவுகிறது.. 


🌺தேவையற்ற  கொழுப்பை  கட்டுப்படுகிறது.. 


🌺உடல்  எடையை  குறைக்க  உதவுகிறது.. 


🌺தோலில்  உள்ள  சுருக்கங்களை  கட்டுப்படுத்தி  மென்மையாக  காணப்படுகிறது.. 


🌺 புற்றுநோய்  செல்களை  கட்டுக்குள்  வைக்கிறது.. 


🌺பெண்களுக்கு  உண்டாகும்  கருப்பை  நோய்களை  குணப்படுத்தும். 


🌺ரத்தத்தில்  சிவப்பணுக்களின் எண்ணிக்கை  அதிகரித்து  ரத்த  சோகை  குறைவாக  நீங்கும்.. 

                

🌺வாய் புண், வயிற்று புண்  சரியாகும்..🌷





Post a Comment

Previous Post Next Post