ஆரோக்கியமான சத்து மாவு செய்முறை ரெஸ்பி
தேவையான பொருட்கள்
ராகி - 1கப்
கம்பு - 1/2 கப்
மக்காச்சோளம் -1/2 கப்
தினை அரிசி -1/2 கப்
கோதுமை -1/2 கப்
க. சுண்டல் -1/2 கப்
ப. பயிறு - 1/2 கப்
து. பருப்பு - 1/2 கப்
பொட்டுக்கடலை - 1/2 கப்
சிவப்பரிசி - 1/2 கப்
ஜவ்வரிசி - 1/2 கப்
பார்லி - 1/2 கப்
எள் - 1/4 கப்
க. உளுந்து - 1/2 கப்
முந்திரி - 1/4 கப்
பாதாம் - 1/4 கப்
பிஸ்தா - 1/4 கப்
நிலக்கடலை - 1/2 கப்
பு. அரிசி - 1/2 கப்
ஏலக்காய் - 20-25
ஜாதிக்காய் - 2 துண்டு
கசகசா - 2 ஸ்பூன்
அவல் - 1/2 கப்
சுக்கு - 1 துண்டு
செய்முறை
🌹அடுப்பை பற்ற வைத்து வாணெலியை அதன் மேல் வைத்து ராகி (கேழ்வரகு) -யை போட்டு வறுக்கவும்.. மீதமான தீயில் வைத்து வறுக்கவும். நிறம் மாறக்கூடாது.. வறுத்ததை ஒரு தட்டில் போடவும்.
🌹அதே வாணெலியில் மக்காச்சோளம் ( மஞ்ச சோளம்) போட்டு வறுக்கவும்.. அனைத்தையும் மிதமான தீயில் வைத்து வறுக்கவும்.. அதையும் அதே தட்டில் போடவும்.
🌹சிவப்பரிசி, கம்பு, எள்ளு, ஜவ்வரிசி, பு. அரிசி இவை அனைத்தையும் தனி தனியாக மிதமான தீயில் வறுக்கவும்..வறுக்கும் போது நன்கு பொரிந்து வரும்.. இதனையும் அத்தட்டில் போடவும்..
🌹இப்படி ஒவ்வொரு பொருட்களையும் தனி தனியாக வறுத்து தட்டில் போட்டு ஆற விடவும்.
🌹இதனுடன் ஜாதிக்காய், சுக்கு சேர்க்கவும்..
🌹அனைத்தையும் ஒன்றாக்கி மெஷினில் அல்லது மிக்ஸி ஜாரில் அரைத்து எடுக்கவும்..
சுவையான சத்துள்ள சத்து மாவு தயார்
இதனை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தவும்..
பயன்படுத்தும் முறை
சத்து மாவு - 1 ஸ்பூன்
தண்ணீர் - 1 டம்ளர்
நா. சர்க்கரை - 2 ஸ்பூன்
(அ)
பனை வெல்லம்
பால் - 1/2 டம்ளர்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் சத்துமாவை போட்டு அதனுடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கட்டி எதுவும் இல்லாமல் கலந்து விடவும்.
அடுப்பை பற்ற வைத்து கரைத்து வைத்துள்ள சத்து மாவை அதன் மேல் வைத்து நன்கு காய்ச்ச வேண்டும்.. மிதமான தீயில் வைத்து காய்ச்ச வேண்டும்.. சத்து மாவு காய்ச்சும் போது திக்காக வரும், அப்போது நாட்டு சர்க்கரை, கருப்பட்டி, சுத்தமான வெல்லம் சேர்த்து கலந்து விடவும்.
அடுப்பை அனைத்து விட்டு அதனுடன் காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்த்து பரிமாறவும்.. அடுப்பை அணைக்காமல் பாலை சேர்த்தால் திரிந்து விடும்..
பயன்கள்
ராகி -இரும்பு சத்துக்கள் உள்ளன..
கம்பு - நார்ச்சத்து நிறைந்த உணவு.
மக்காச்சோளம்- மெக்னீசியம் உள்ளது.
தினை அரிசி-நார்ச்சத்து நிறைந்த உணவு.
கோதுமை -நார்ச்சத்து இருக்கிறது.
க. சுண்டல் (அ) க. கொண்டக்கடலை-நார்ச்சத்துக்கள் உள்ளன.
ப. பயிறு- அதிக வைட்டமின் உள்ளது.
து. பருப்பு- புரோட்டீன் உள்ளது.
சிவப்பரிசி -நார்ச்சத்து உள்ளது.
ஜவ்வரிசி - புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது.
பார்லி-நார்ச்சத்து, வைட்டமின் பி உள்ளது.
எள் -இரும்பு சத்து, வைட்டமின் ஏ, பி உள்ளது.
க. உளுந்து-இரும்பு சத்து, புரதம், பொட்டாசியம் உள்ளது..
பொட்டுக்கடலை-புரோட்டின், நார்ச்சத்துக்கள் உள்ளது..
முந்திரி- நார்ச்சத்து, வைட்டமின், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம்..
பாதாம்-நார்ச்சத்து, வைட்டமின்...
பிஸ்தா- நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் பி6...
நிலக்கடலை-போலிக் ஆசிட், மாங்கனீசு, தாமிரம், துத்தநாக..
ஏலக்காய்-ஏலக்காய்-கார்போஹட்ரேட்டுகள், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம்...
ஜாதிக்காய்- அற்புதமான மருத்துவக் குணங்கள் கொண்டது.
கசகசா - பொட்டாசியம், கால்சியம், தாமிரம், மெக்னீசியம், இரும்பு சத்துக்கள் உள்ளன.
அவல் - வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், புரதம்...
சுக்கு- செரிமானத்திற்கு உதவுகிறது..
(வெள்ளை சர்க்கரை உடலுக்கு கேடு விளைவிக்கும்)