மொறு மொறு வெங்காயம சமோசா செய்முறை

 மொறு மொறு  சமோசா  செய்முறை

குழந்தைகளுக்கு  மிகவும் பிடித்த  ஸ்நாக்ஸ் ரெஸ்பி.வீட்டிலேயே  எளிமையான  முறையில்  சமோசா செய்வது  எப்படி என்று கீழ்வரும் வரிகளில் பார்ப்போம்... 


தேவையான பொருட்கள்


மைதா சீட் செய்ய

மைதா                  - 1கப்

எண்ணெய்      - 1 ஸ்பூன்

உப்பு                         - தேவையான அளவு

தண்ணீர்             -  சிறிது


மசாலா செய்ய

பெரிய வெங்காயம்      - 2

மஞ்சள் தூள்                   - 1/4 ஸ்பூன்

மிளகாய் தூள்                - 1 ஸ்பூன்

கரம் மசாலா                    -  1/2 ஸ்பூன்

உப்பு                                  -தேவையானவை

கொத்தமல்லி இலை - சிறிது

பொரித்த சமோசா சீட் -  சிறிது

எண்ணெய்                           - 1/2 லி


செய்முறை

                      

🌹ஒரு   பாத்திரத்தில்   மைதா மாவை  போட்டு  அதனுடன்  எண்ணெய், உப்பு, தண்ணீர்  சேர்த்து  சப்பாத்தி  மாவு  பிசைவதுப்  போல் பிசைந்து  மூடி போட்டு  1/2 மணி நேரம் ஊற  விடவும். 


                       

 🌹1/2 மணி  நேரம்  ஊறிய  பிறகு  மீண்டும்  பிசைந்து  கொள்ளவும்.. மாவு  கையில்  ஒட்டக்  கூடாது.. அதனை  உருண்டைகளாக  உருட்டி  சப்பாத்திக்கு  திரட்டுவது  போல்  மெலிதாக  இருக்க  வேண்டும்.. 


                           

🌹அடுப்பில்  தோசை தவாவை வைத்து  மிதமான சூட்டில்  போட்டு எடுக்கவும். (திரட்டியதை  தவாவில் போட்டு ஒரு பக்கம் சூடேறியதும் திருப்பி  போட்டு எடுக்கவும்.. ரொம்ப  நேரம்  தவாவில் விட்டால்  கிரிஸ்பியாக மாறி விடும்). 

                            

🌹அனைத்து  உருண்டைகளையும்  திரட்டி போட்டு எடுத்துக் கொள்ளவும்.. அனைத்தையும் ஒன்றின்  மேல்  வைத்து, கத்தி  வைத்து  ஓரங்களில் உள்ள பிசுரை  கட் செய்து  சதுரமான  மைதா  சீட்  தயார்.. 



                            

🌹ஓரங்களில்  நறுக்கிய  மைதா  சீட்டை, வாணெலியில்  எண்ணெய்  ஊற்றி காய்ந்ததும்  அதில்  போட்டு  பொரித்து  எடுக்கவும்.. 


மசாலா  செய்முறை

                            

🌹பெரிய  வெங்காயத்தை  நறுக்கிக்  கொள்ளவும்.. வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், அதனுடன்  மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, பொடியாக  நறுக்கிய  கொத்தமல்லி  இலை, எண்ணெயில்  பொரித்த  மைதா  சீட்  ஓரங்கள்(தூளாக செய்து கொள்ளவும்) போட்டு  கலந்து  வைக்கவும்.. 



                  

 🌹ஒரு  கிண்ணத்தில் மைதா மாவு போட்டு அதனுடன்  தண்ணீர் சேர்த்து  பேஸ்ட் போல்  தயார்  செய்ய  வேண்டும்.. 


                   

🌹சமோசா சீட்டை எடுத்து  அதனை  கோன் போல் செய்து..நடுவில்   மசாலாவை வைத்து மடித்து ஓரங்களை  மைதா  பேஸ்டை கொண்டு  தடவினால் , பிரியாமல் இருக்கும்.. 



                  

🌹 வாணெலியில் எண்ணெய்  ஊற்றி  காய்ந்ததும்  சமோசாவை  போட்டு இரண்டு  பக்கமும்  திருப்பி, பொன்னிறமாக  ஆனவுடன்  எடுத்து  பரிமாறலாம்

சுவையான  சமோசா  தயார்

Post a Comment

Previous Post Next Post