சுவையான முறையில் மசால் பூரி செய்வது எப்படி?

 சுவையான மசால் பூரி  செய்முறை


தேவையான பொருட்கள்

 பட்டாணி                       -  1 கப்

உருளைக்கிழங்கு  -  2

எண்ணெய்                  -  1 தேக்கரண்டி

சோம்பு                              - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்               - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள்           -  1/2 தேக்கரண்டி

கரம் மசாலா               -  1 தேக்கரண்டி

உப்பு                                    -   தேவைக்கேற்ப

அரைக்க

எண்ணெய்                       -   1 தேக்கரண்டி

பட்டை                                     -   2

மிளகு                                     -   6-10

பிரிஞ்சி இலை;            -   1

பெ. வெங்காயம்           -   1

தக்காளி                              -   2

ப. மிளகாய்                       -   1-2

பூண்டு                                  -   6-10

இஞ்சி                                   -  சிறு துண்டு

கொத்தமல்லி இலை -  1 கைப்பிடி

புதினா இலை                -  1 கைப்பிடி


செய்முறை

                      ☘ பச்சை  பட்டாணி   காயாக  இருந்தால், சீக்கிரம்  வெந்து  விடும்.. அதுவே   காய்ந்த  பச்சை பட்டாணி  என்றால்  அதனை  தண்ணீரில்  ஊற  வைத்து  விசில்  அதிகமாக  விடவும்.. 


                       ☘ வாணெலியில் எண்ணெய்   ஊற்றி பட்டை, பிரிஞ்சி இலை, மிளகு, நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பூண்டு,  இஞ்சி, சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். 


                    ☘  வதக்கியதை  மிக்ஸி ஜாரில்  போடவும். அதனுடன்  புதினா இலை, கொத்தமல்லி இலை,  மஞ்சள் தூள்,  மிளகாய் தூள்,  கரம் மசாலா  சேர்த்து  பேஸ்டாக அரைக்கவும். 


                    ☘  குக்கரில்  பச்சை பட்டாணி, தோல்  உரித்த உருளைக்கிழங்கு,  உப்பு, தண்ணீர் சேர்த்து  விசில்  விட்டு இரக்கவும். 


                   ☘   குக்கர்   மூடியை   திறந்து பட்டாணி   ஒன்னு - இரண்டாக மசித்துக்   கொள்ளவும். 


                    ☘   வாணெலியில் எண்ணெய்   ஊற்றி   காய்ந்ததும் சோம்பு   போடவும்.  அதனுடன் அரைத்த   மசாலாவை   சேர்த்து நன்கு வதக்கவும். 


                     ☘   அதனுடன்    மசித்த          ப. பட்டாணி  கலவையை  தண்ணீர் உடன்   சேர்த்து  ஊற்றி  கொதிக்க  விடவும்.. (தேவைப்பட்டால்  தண்ணீர்  சேர்த்துக்  கொள்ளலாம்). கொத்தமல்லி  இலையை  தூவி  பரிமாறவும்.. 

                      ☘ ஒரு   தட்டில்   பூரியை  சிறிது   சிறிதாக   உடைத்துக்  கொள்ளவும்.  அதன்  மேல்  குருமா நறுக்கிய  வெங்காயம் சிறிது ஓமப்பொடி  தூவி  பரிமாறவும். 

பூரி செய்முறை


மைதா  மாவு       -  1/2 கப்

ரவை                       -  1 1/2 கப்

ஜவ்வரிசி மாவு   -  3 கப்

உப்பு                          -  தேவைக்கேற்ப


செய்முறை

                          ☘ ஒரு  பாத்திரத்தில்  மைதா மாவு, ரவை, ஜவ்வரிசி மாவு, உப்பு  , தண்ணீர்  சேர்த்து  பூரி  மாவு  பிசைவது  போல்  பிசைந்து  15  நிமிடங்கள்  ஊற  விட்டு, பின்பு  அதனை  பூரிக்கு  திரட்டுவது போல்  திரட்டி, சிறு  மூடியை  வைத்து  அழுத்தி  சிறு சிறு  பூரியாக  எண்ணெயில்  போட்டு  பொரித்து  எடுக்கவும்.. பூரி  தயார்... 






Post a Comment

Previous Post Next Post