சுவையான பெரிய நெல்லிக்காய் குல்கந்து ரெஸ்பி

 பெரிய நெல்லிக்காய்  குல்கந்து


நெல்லிக்காய் இனிப்பு, புளிப்பு  மற்றும்  துவர்ப்பு  சுவைகளைக்  கொண்டது.. வைட்டமின் சி  நிறைந்துள்ளக்  கனி..நோய்  எதிர்ப்பு  சக்தியை  அதிகரிக்கும்.. உடல்  சூட்டை  தணிக்கும்.. 

குழந்தைகளுக்கு  பெரிய நெல்லிக்காயை பிடிக்காது.. இதில்  ஏராளமான நன்மைகள்  உள்ளன.. அதனால் குல்கந்தாக செய்து  கொடுத்தால்   விரும்பி  சாப்பிடுவார்கள்.


தேவையான பொருட்கள்


பெரிய நெல்லிக்காய் - 1/2 கி

வெல்லம்                 - 250 கி

தேன்                          - 2 மேஜைக்கரண்டி

தண்ணீர்              - தேவையானவை

நட்ஸ்                         - விருப்பமான


செய்முறை


                    ☘   பெரிய  நெல்லிக்காயை  தண்ணீர் விட்டு  அலசிக்  கொள்ளவும்.. 


                                      ☘  காய் சீவிவும்  தட்டில்  நெல்லிக்காயை   துருவிக்  கொள்ளவும்.

                      

               ☘ அடுப்பை  பற்ற வைத்து  இரும்புக்   கடாயை  வைத்து  துருவிய  நெல்லிக்காயை போட்டு சிறிது  தண்ணீர்   தெளித்து  மூடி  போட்டு  ஒரு 5 நிமிடம்  மிதமான   தீயில்  வேக  விடவும்.. 


                       ☘  மண் குப்பை  இல்லாத  நல்ல வெல்லமாக  எடுத்துக்  கொள்ளவும்.. (அப்படி  வெல்லம்  கிடைக்கவில்லை  என்றால்  , அடுப்பில்  பாத்திரம்  வைத்து  சிறிது  தண்ணீர்  விட்டு வெல்லத்தை போட்டு , கொதித்த  பின்பு  சல்லடை  வைத்து  வடித்துக்  கொள்ளவும்). 


                       ☘ வெல்லத்தை , அடுப்பில்  இருக்கும்   நெல்லிக்காய்  துருவலுடன்  சேர்த்துக் கொள்ளவும்.. நெல்லிக்காயில்  இருக்கும்  தண்ணீரே  போதுமானது, வெல்லம்  கரைய...இதுவே  வெல்லக்  கரைசல்  ஊற்றுகிறீர்கள் என்றால் நெல்லிக்காயில்  இருக்கும்  தண்ணீர்  ட்ரை பண்ணி  அதனுடன்  கரைசலை  சேர்க்கவும்.. 


                       ☘    வெல்லம்  கரைந்து  நெல்லிக்காயுடன்  சேர்ந்து  நன்கு  தண்ணீர்  முழுமையாக சுண்டும்  வரை  கிளறவும்.. (தண்ணீர்  இருந்தால், அதனை  ரொம்ப  நாட்களுக்கு  வைத்திருக்க  முடியாது , கெட்டு விடும் ... ) 


                        ☘  அடுப்பை  அனைத்து விட்டு, அதனை  ஆற விடவும்.. ஆறிய  பின்பு, அதனுடன்  சுத்தமான  தேன்  சேர்த்து  கிளறி விடவும்.. இதனுடன் பாதாம்  துருவி  போட்டுக்  கொள்ளலாம். (விருப்பமான  நட்ஸை  சேர்த்துக்  கொள்ளலாம்). 


                         ☘ ஈரம்  இல்லாத  சுத்தமான  கண்ணாடி  பாட்டிலை  எடுத்து, அதில்   நெல்லிக்காய்  குல்கந்தை  போட்டு  ஸ்டோர் பண்ணி  வைத்துக் கொள்ளவும். தினமும்  ஒரு  ஸ்பூன்  விதம்  எடுத்துக்  கொண்டால்  உடலுக்கு  ஏராளமான  நன்மைகள்  கிடைக்கிறது.. 


 நெல்லிக்காயின்  பயன்கள்

கண்களுக்குக்  குளிர்ச்சியை  தரும். 

செரிமானத்தை  தூண்டும். 

கூந்தல் வளர்ச்சியை  தூண்டும். 

புற்றுநோய் செல்களை  எதிர்த்து  போராடக் கூடியது.. 

கண் பார்வை  தெளிவாகும்.. 

வயிற்றுக்  கோளாறுகளுக்கு நல்லது.. 

மலச்சிக்கலை சரி செய்யும்

ஆண்மை  சக்தியை  பெருக்கி உடல்  வலிமை  பெறும்.. 

ரத்தத்தில்  உள்ள  சர்க்கரையின்  அளவை  கட்டுக்குள்  வைக்கும்... இன்னும்  ஏராள நன்மைகள் உள்ளன.. 


Post a Comment

Previous Post Next Post