வீட்டில் எளிமையாக நல்ல மணமாக கரம் மசாலா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி -2தேக்கரண்டி
சீரகம் - 1தேக்கரண்டி
சோம்பு - 1 1/2தேக்கரண்டி
பட்டை - 4
கிராம்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 1தேக்கரண்டி
ஏலக்காய் - 10
பிரிஞ்சி இலை - 3
நட்சத்திர சோம்பு- 1தேங்கரண்டி
கல் பாசி - 1 தேக்கரண்டி
செய்முறை:
☘ வாணெலியை அடுப்பில் வைத்து
எண்ணெய் இல்லாமல்
கொத்தமல்லி, சீரகம் , சோம்பு , பட்டை
, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி
இலை, நட்சத்திர சோம்பு, கல் பாசி
அனைத்தையும் போட்டு சிம்மில்
வைத்து வறுக்க வேண்டும்...
(அதனுடைய நிறம் மாறக் கூடாது)
☘ஆறிய பின்பு மிக்ஸியில்
போட்டு அரைத்து, ஒரு டப்பாவில்
போட்டு மூடி வைத்துக் கொள்ளவும்..
☘ஒட்டு மொத்தமாக நிறையா
அரைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக
அரைத்துக் கொள்ளலாம்.. அதிகமாக
அரைத்துக் கொண்டால் வாசனை
குறைந்து விடும்..
பயன்கள்:
சீரகம்:
☘செரிமானத்திற்கு உகந்தது.
☘சளி மற்றும் காய்ச்சலை போக்கும்.
☘நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
☘இரும்புச்சத்தை கொண்டுள்ளது..
☘எடையை குறைக்கும்..
சோம்பு:
☘வயிற்று கோளாறுகள் சரியாகும்.
☘சுவாச நோய் பிரச்சனைகள் சரியாகும்.
☘வாய் துர்நாற்றம் நீங்கும்.
☘சர்க்கரையின் அளவை சரியாக வைக்கும்..
☘மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகும்.
பட்டை
☘மூட்டு வலிக்கு ஏற்றது.
☘சிறுநீர் கோளாறு நீங்கும்.
☘கெட்டக் கொழுப்புகளை குறைக்கும்.
☘விஷக்கடிக்கு ஏற்றது.
☘இதய நோய்க்கு சிறந்தது.
கிராம்பு
☘நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
☘தேனுடன் கிராம்பு பொடியை உண்டால் வாந்தி நிற்கும்.
☘காலரா குணமாகும்.
☘புற்றுநோய் செல்களின் வளர்ச்சியினை தடுக்கும்.
☘பல் பிரச்சனைகள் சரியாகும்.
மிளகு
☘நெஞ்சு சளியை போக்கும்..
☘புற்றுநோய் வருவதை தடுக்கிறது.
☘மன அழுத்தத்தை போக்கக்கூடியது.
☘இரத்த கொதிப்பை குறைக்கும்.
ஏலக்காய்
☘உயர் ரத்த அழுத்ததை குறைக்கிறது.
☘கெட்ட பாக்டீரியாவுக்கு எதிராகப் போராடும்.
☘விக்கலை போக்கும்.
☘மன அழுத்தத்தைக் குறைக்கும். இலைகள்
☘பசியின்மையை விரட்டும்.
பிரிஞ்சி இலை
☘மூட்டு வாத பிரச்சினை சரியாகும்.
☘புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட்டம கூடியது.
நட்சத்திர சோம்பு
☘வாயுக்கோளாறு மற்றும் அஜீரணத்தை குணப்படுத்தும்.
☘அழற்சியினால் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்யும்.
கல்பாசி
☘சிறுநீரக கற்களைக் கரைக்கும்.
☘இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
☘சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும்..
☘இருமல் மற்றும் ஆஸ்துமா சரியாகும்.
நல்ல மணமான கரம் மசாலா தயார்