பன்னீர் பட்டர் மசாலா கிரேவி செய்வது எப்படி?

 பன்னீர் பட்டர் மசாலா கிரேவி செய்வது எப்படி? 


தேவையான பொருட்கள்:

பன்னீர்                                 - 100கி

ஆயில்                                   -  2தேக்கரண்டி

பெ. வெங்காயம்            -  3

தக்காளி                                -  2

இஞ்சி, பூண்டு விழுது-  1ஸ்பூன்

மஞ்சள் தூள்                    -  1/4 ஸ்பூன்

கொத்தமல்லி தூள்  -  2 தேக்கரண்டி

மிளகாய் தூள்               -  1 1/2 ஸ்பூன்

முந்திரி                                -   5

உப்பு                                       -  தேவைக்கேற்ப

கரம் மசாலா                   -   1தேக்கரண்டி

வெண்ணெய்                -   1தேக்கரண்டி

கிரிம்(அ)                           

பால் ஏடு                            -  1தேக்கரண்டி

கொத்தமல்லி இலை -  சிறிது

சர்க்கரை                           -  1/2 தேக்கரண்டி


செய்முறை:

            🌷ஒரு  பாத்திரத்தில்  சுடு தண்ணீர்  வைத்து  பன்னீரை   சிறு  துண்டுகளாக வெட்டி அதனுடன்   போட்டு   2நிமிடம்  வைத்து  தண்ணீரை  வடிக்கவும். 


          🌷முந்திரியை  சுடு  தண்ணீரில் 10 நிமிடம் போட்டு   பேஸ்டாக  அரைக்கவும். 

          🌷வாணெலியில்  எண்ணெய்  ஊற்றி  பெரிய  வெங்காயத்தை  பொடியாக  நறுக்கி  பொன்னிறமாக  வதக்கவும். 

           🌷அதனுடன்  இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி (பொடியாக  நறுக்கியது) -யை    உப்பு சேர்த்து பேஸ்ட் போல்  வதக்கவும்.. 


          🌷பின்பு  அதனுடன்  மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் ,கரம் மசாலா போட்டு  நன்கு   5நிமிடம்   கிளறி விடவும். 


          🌷முந்திரி  பேஸ்டை போட்டு கிளறவும். 

           🌷அதற்கு   தேவையான  தண்ணீர்  சேர்த்து  கொதிக்க  வேண்டும். 

            🌷அதனுடன்  சிறிது  சர்க்கரை, வெண்ணெய் , பால் ஏடு(அ) கீரிம்  போட்டு  அடுப்பை சிம்மில் 5 நிமிடம் வைக்கவும். 


            🌷 பின்பு  பன்னீரை  போட்டு 

2-3நிமிடம் கொதிக்க விடவும். 


🌷கொத்தமல்லி  இலையை  தூவி  பரிமாறவும்.. 


பன்னீரின் பயன்கள்:

புரதம்  அதிமாக உள்ளது. 

நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். 

இரத்த ஓட்டத்தை சீராக்கும்.. 

குழந்தைகளுக்கு ஞாபக  சக்தியை  அதிகரிக்கும்.. 

கால்சியம் இருப்பதால் எலும்புகளை வலுவாக்கும்.. 

Post a Comment

Previous Post Next Post