கருவாட்டுக் குழம்பு செய்வது எப்படி?

 கருவாட்டுக் குழம்பு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

கருவாடு                       - 100கி
எண்ணெய்                 -  2 தேக்கரண்டி
கடுகு                                -  1/2தேக்கரண்டி
சின்ன வெங்காயம்-  10-15
மிளகாய்                        -  3
கறிவேப்பிலை     -  10இலைகள்
கத்திரிக்காய்          -   8
உப்பு                                 -   தேவைக்கேற்ப
புளி                                   -   எலுமிச்சை அளவு

அரைக்க:
சின்ன வெங்காயம்   -  15-20
தேங்காய்                        -  1மூடி
பூண்டு                                -   8
கறி மசாலா                   -   2மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள்                -   1/2 தேக்கரண்டி

செய்முறை:

            🌹வாணெலியில்  எண்ணெய்  ஊற்றி சின்ன  வெங்காயம்,   பூண்டு,
கறிவேப்பிலை போட்டு  வதக்கி  மிக்ஸி ஜாரில்  போடவும். 

          🌹அதனுடன்  தேங்காய், மஞ்சள் தூள், கறி மசாலா  இவ்வனைத்தையும் அரைக்கவும்.. 
          🌹புளியை   தண்ணீரில்   அலசி,  சிறிது தண்ணீரில்  ஊற  போட்டு கரைத்து எடுக்கவும். 
         🌹கத்திரிக்காயை  அலசி  நான்காக நீள  வாக்கில்  அரிந்து  தண்ணீரில்  போடவும். 

         🌹ஒரு  பாத்திரத்தை  அடுப்பில்   வைத்து எண்ணெய்  ஊற்றி   காய்ந்ததும் கடுகு போட்டு  வெடித்ததும்  சின்ன  வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் போட்டு வதக்கவும். 
          🌹அரைத்த  மசாலா,புளி கரைசல் உப்பு அதனுடன்  ஊற்றி நன்கு  கொதிக்க விடவும். 

           🌹   கத்திரிக்காயை  அதனுடன்  சேர்த்து   வேக  விடவும்.. 

          🌹கருவாட்டை  நான்கு  ஐந்து முறை தண்ணீரில்  போட்டு அலசவும். 
          🌹கத்திரிக்காய்  வெந்தவுடன்  கருவாட்டையும்  சேர்த்து  5நிமிடம்  சிம்மில் வைத்து  இறக்கவும்.. 

சுவையான  கருவாட்டுக்  குழம்பு  தயார்

கருவாட்டின் பயன்கள்:

☘நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 
☘எலும்பு  மற்றும் பற்கள்  உறுதியாகும்.. 
☘தாய்பால் சுரக்கும்.. 
☘ஜலதோஷம் சரியாகும்.. 

Post a Comment

Previous Post Next Post