சிக்கன் பள்ளிபாளையம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1கி
எண்ணெய் - 2மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 1/4 கி
காய்ந்த மிளகாய் - 10-15
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - 2 துண்டுகள்
பூண்டு - 15-20பல்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - 1மூடி
கொத்தமல்லி - தேவையானவை
செய்முறை:
🌹சிக்கன் 1கிலோவை சிறு சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் அலசிக் கொள்ளவும்..
🌹இஞ்சியை சுரண்டி பூண்டு பல்லுடன் தட்டி வைத்துக் கொள்ளவும்.
🌹வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பு போடவும்.
🌹அதனுடன் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்..
(காய்ந்த மிளகாயை கிள்ளி விதையில்லாமல் எடுத்து வைக்கவும்.. )
🌹வதங்கிய பின் இஞ்சி, பூண்டு விழுதை அதனுடன் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுதை எண்ணெயிில் வதக்கும் போது சுவையாகவும், நல்ல மணமாகவும் இருக்கும்.