கோதுமை பிஸ்கட் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
சர்க்கரை (சீனி) - 1/2கப்
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
பொடி உப்பு - 1 சிட்டிகை
சோடா உப்பு - 1 சிட்டிகை
தண்ணீர் - தேவைக்கேற்ப
கடலை எண்ணெய்(அ)
ஆயில் - 1/2 லிட்டர்
வெண்ணிலா எஸ்சன்ஸ் - 1தேக்கரண்டி
செய்முறை:
🌷முதலில் சர்க்கரை 1/2 கப்பை மிக்ஸியில் போட்டு பவுடர் ஆக அரைத்துக் கொள்ளவும்.
இனிப்பு அதிகமாக வேண்டும் என்றால் சிறிது கூடுதலாக சேர்த்துக் கொள்ளவும்..
🌷ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு 2கப்பை சேர்த்துக் கொள்ளவும்.
🌷அதனுடன் பொடித்த சர்க்கரை , வெண்ணெய், உப்பு, சோடா உப்பு, வெண்ணிலா எஸ்சன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
🌷தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து பிசைய வேண்டும்.. சப்பாத்தி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்..
(பிசைந்த மாவை விரலில் அழுத்தினால் பள்ளம் போல் இருக்க வேண்டும்..)
🌷10 நிமிடங்கள் ஊற விடவும். பின்பு பெரிய உருண்டைகளாக உருட்ட வேண்டும்..
🌷கல்லில் கோதுமை மாவை தூவி அதன் மேல் உருண்டையை வைத்து உருட்ட வேண்டும். சிறு தடி மண்ணாக இருக்க வேண்டும்..
🌷கத்தி அல்லது கட்டரை வைத்து பீஸ் போடவும். எந்த வடிவம் தேவையோ அந்த வடிவத்தில் கட் செய்யவும்..
🌷வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கட் செய்து வைத்துள்ள பிஸ்கட்டை போட்டு பொரித்து எடுக்கவும்.
(மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்).
சுவையான கோதுமை பிஸ்கட் தயார்
☘கோதுமையில் புரதச்சத்து, கொழுப்புசத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து.. போன்றவை உள்ளது..
☘சர்க்கரையின் அளவு குறையும்..
☘இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடும்..
☘கோதுமை பாலை கப நோயாளிகளுக்கு கொடுத்தால் நல்ல பலன் தரும்..