கோதுமை மாவு அல்வா செய்வது எப்படி?

 கோதுமை மாவு அல்வா செய்வது  எப்படி? 

தேவையான பொருட்கள்:

 கோதுமை மாவு -   1 கப்
 சர்க்கரை              -   2 1/2கப்
 நெய்                       -   1/2 கப்
 தண்ணீர்              -    5 கப்
 முந்திரி                 -     தேவையான அளவு
செய்முறை:

     ☘கோதுமை மாவை  சல்லடையில் சலித்து வைக்கவும். 

      ☘ஒரு  பாத்திரத்தில்  சலித்த  கோதுமை மாவை போட்டு முதலில் 1கப் தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கலக்கவும்.. மீதம் உள்ள  4 கப் தண்ணீரையும் அதனுடன்  ஊற்றி வைத்துக் கொள்ளவும்.. 

      ☘வாணெலியில்  நெய்  சிறிது  ஊற்றி முந்திரி பருப்பை போட்டு வறுத்து எடுக்கவும்.. 
        ☘அதே  வாணெலியில்  கோதுமை கரைத்து  வைத்துள்ள தண்ணீரை  ஊற்றி கலக்க வேண்டும்.. 
         ☘வேறு  ஒரு  பாத்திரத்தில்  சர்க்கரை 1/2  கப் போட்டு  கேரமலைஸ் செய்யவும்.. 
(தண்ணீர்  சேர்க்காமல்  வெறும் சர்க்கரை யை மட்டும் கிளறவும். ) 
          ☘சர்க்கரை  முழுவதும்  கரைந்தவுடன் எடுத்து  கோதுமை  மாவு  தண்ணீரில்  ஊற்றி  கிளறிக்  கொண்டே  இருக்கவும்.. 
         ☘தண்ணீர்  சுண்டி  பால் திக் ஆகும்போது  மீதம்  உள்ள 2கப்  சர்க்கரையை     போட்டு     கிளற  வேண்டும்.. 

☘நெய்  ஊற்றி  கை  விடாமல் கிளறிக் கொண்டே  இருக்கவும். வறுத்த  முந்திரி பருப்பை  அதனுடன் சேர்க்கவும்.. 

☘பாத்திரத்தில்  ஒட்டாமல்  சுருண்டு வரும்போது, ஒரு  தட்டில்  நெய் தடவி அதில் எடுத்து  ஊற்ற  வேண்டும்.. 
சுவையான  கோதுமை அல்வா  தயார்

Post a Comment

Previous Post Next Post