இஞ்சி மரப்பான் செய்வது எப்படி?

 இஞ்சி மரப்பான் செய்வது எப்படி? 

தேவையான பொருட்கள்:
இஞ்சி                         -    1கப்
சர்க்கரை (சீனி)     -     2கப்
நெய்                            -    1தேக்கரண்டி
தண்ணீர்                   -    1கப்
செய்முறை:

             🌹இஞ்சியை  நன்கு  அலசி  தோல்  சீவி சிறு  சிறு  துண்டுகளாக  நறுக்கி மிக்ஸியில்  போட்டு அரைத்து எடுக்கவும். 
            🌹அரைத்த  விமுதை  ஒரு கப்பில்  போட்டு அளவிடவும்.. 

            🌹ஒரு தட்டில் நெய் தடவி வைத்துக் கொள்ளவும். 

            🌹அடி கனமான  வாணெலியில்  சர்க்கரை  2கப் போட்டு  தண்ணீர்  1கப்  ஊற்றி  ஒரு கம்பிப்  பதம்  வரும் வரை  காய்ச்ச  வேண்டும்.. 

           🌹சர்க்கரை  பாகு  தயார் ஆனவுடன்  அரைத்த  இஞ்சி  விழுதை  போட்டு காய்ச்ச  வேண்டும்.. 

           🌹 நெய் விட்டு  நன்கு  காய்ச்சி சுருண்டு  வரும்போது  நெய் தடவிய தட்டில்  இஞ்சி மரப்பானை  எடுத்து ஊற்றிவும். 

              🌹இஞ்சி  மரப்பானை மேலே சமம்மாக இருக்க ஒரு கரண்டி அல்லது ஒரு தட்டில் பின் பக்கமாக நெய் தடவி தட்டவும்.. 

              🌹சூடாக  இருக்கும்  போதே கத்தியால் வில்லைகளை போடவும். 

சுவையான இஞ்சி மரப்பான் தயார்

     
இஞ்சியின் பயன்கள்:

🍀புற்றுநோய்  செல்களின் வளர்ச்சியை தடுக்கக் கூடியது.. 

🍀சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். 

🍀ஜீரணத்திற்கு ஏற்றது.. 

🍀இதய ஆரோக்கியம் மேம்படும்.. 

🍀மூட்டு வலி பிரச்சனைகள் சரியாகும்.. 

             உணவே மருந்து

"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு"


Post a Comment

Previous Post Next Post