பீட்ரூட் மால்ட் செய்வது எப்படி?

 பீட்ரூட் மால்ட் செய்வது எப்படி? 

தேவையான பொருட்கள்:
பீட்ரூட்                        -    300கி
நாட்டு சர்க்கரை    -    300கி
முந்திரி                      -    6
பாதாம்                       -    10
ஏலக்காய்                 -     3

செய்முறை:
         🌹பீட்ரூட்டை  தோல்   சீவி தண்ணீர் விட்டு அலசி எடுக்கவும். 

         🌹பீட்ரூட்டை  சிறு  சிறு
 துண்டுகளாக நறுக்கவும். 

          🌹மிக்ஸியில் போட்டு பேஸ்டாக  அரைத்து எடுக்கவும்.. அரைக்கும் போது தண்ணீர் சேர்க்கக் கூடாது. 
          🌹அடி  கனமான  வாணெலியில் முந்திரி, பாதாம், ஏலக்காய் போட்டு  வறுத்து பொடி செய்யவும். 
          🌹அதே  வாணெலியில்   அரைத்து வைத்த பீட்ரூட்  கலவையை போட்டு கிளற வேண்டும். 
         🌹கை விடாமல்  கிளறிக்  கொண்டே இருக்கவும். பீட்ரூட்டின் தண்ணீர்  சுண்டும்  போது  நாட்டு சர்க்கரை, நெய் போட்டு கிளறிக் கொண்டே இருக்கவும்.. 
          🌹அதில் இருக்கும்  தண்ணீர்  சுண்டியவுடன் பொடியை (முந்திரி,பாதாம்,ஏலக்காய்) போட்டு கலந்து  அடுப்பை  அனைக்கவும்.. 

          🌹 அந்த வாணெலியை  காற்று உள்ள இடத்திற்கு (fan)எடுத்துச் சென்று கிளறிக் கொண்டே இருக்கவும்.. கெட்டியாகிக்  கொண்டே இருக்கும். 

          🌹15-20 நிமிடம் கிளறிக் கொண்டே இருந்தால்  உதிரி ஆகிவிடும்.. 

          🌹அதனை   மிக்ஸியில்  பல்ஸ் மோடில் விட்டு எடுக்கவும். அதிக நேரம் மிக்ஸியில்  அரைத்தால்  பேஸ்டாகி விடும். பார்பதற்கு  பூஸ்ட் மாதிரி உதிரியாக  இருக்கும்..

இதனை 1டம்ளர் பாலில் 2ஸ்பூன் பீட்ரூட் மால்டை போட்டு  அருந்தலாம்.. 

சுவையான  சத்துள்ள  பீட்ரூட்   மால்ட் தயார்

பீட்ரூட்டின் பயன்கள்:

☘ உடலில்  இரத்தத்தை அதிகரிக்கும். 
☘கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும். 
☘முகப் பொழிவை  தரும். 
☘எலும்பு வலிமை  பெறும்
☘இரத்த அழுத்தம் குறையும். 
☘புற்று நோயை கட்டுப்படுத்தும்.... 


Post a Comment

Previous Post Next Post