எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 8
எண்ணெய் - 3-4மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 3
ப.மிளகாய் - 2
தக்காளி - 2
கறிவேப்பிலை - 10இலைகள்
கரம் மசாலா - 1தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1/2தேக்கரண்டி
வெல்லம் - 1/2தேக்கரண்டி
கொத்தமல்லி இலை- சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க:
வேர் கடலை - 2மேஜைக்கரண்டி
எள்ளு - 2தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2-3
மிளகு - 10-15
சீரகம் - 1தேக்கரண்டி
முந்திரி - 5
செய்முறை:
🌷 கத்திரிக்காயை அலசி நீள வாக்கில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
🌷 நிலக்கடலை, எள்ளு , சீரகம் தனி தனியே வறுத்தெடுக்கவும்.
🌷புளியை அலசி தண்ணீரில் ஊற போடவும்.
🌷வாணெலியில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய கத்திரிக்காயை போட்டு 50%வேக விட்டு ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
🌷அதே வாணலியில் இருக்கும் எண்ணெய்க்குள் பெரிய வெங்காயம் (பொடியாக்கி நறுக்கியது),ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
🌷பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள், உப்பு சேர்த்து நன்கு பேஸ்டாக வரும் வரை வதக்கவும்.
🌷 மிக்ஸியில் வறுத்த நிலக்கடலை, எள்ளு, சீரகம், மிளகு , காய்ந்த மிளகாய் , முந்திரி போட்டு பொடியாக அரைக்கவும்.
🌷தக்காளி வதங்கியவுடன் அரைத்த பொடி,கரம் மசாலா சேர்த்து கிளறவும்.
🌷 தேவையான புளி தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
🌷நன்கு கொதிக்கும் போது கத்திரிக்காயை போடவும்.அதனுடன் சிறிது வெல்லம் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வைக்கவும்..
🌷சிறிது கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்..