ரவை பாயாசம் செய்வது எப்படி?

 ரவை பாயாசம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:
ரவை                      -    1கப்
சர்க்கரை              -    2கப்
நெய்                       -    2 தேக்கரண்டி
மில்க் மெய்டு     -    2 தேக்கரண்டி
முந்திரி                  -    10-15
திராட்சை              -    10-15
செய்முறை:

             🌹வாணெலியில்  நெய்  விட்டு  முந்திரி, திராட்சை போட்டு  வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.. 

           🌹அதே வாணெலியில் ரவையை போட்டு வறுக்கவும்.. 

           🌹அதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து ரவையை நன்கு வேக விடவும். 

           🌹வெந்தவுடன் சர்க்கரை, மில்க் மெய்டு, நெய், பால் (தேவைக்கேற்ப) சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 

            🌹அதனுடன் முந்திரி, திராட்சை போட்டு பரிமாறவும். 

சுவையான ரவை பாயாசம் தயார்




Post a Comment

Previous Post Next Post