பருப்பு வடை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
பட்டாணி பருப்பு - 1/2 கி
சின்ன வெங்காயம் - 200-250கி
சோம்பு - 1 தேக்கரண்டி
புதினா - சிறிது
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி இலை - சிறிது
பெருங்காயத்தூள் - சிறிது
எண்ணெய் - 1/2லி
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க:
காய்ந்த மிளகாய் - 6-8
சீரகம்; - 1தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5-10
பூண்டு - 15
இஞ்சி - 1 துண்டு
பட்டை - 2
கிராம்பு - 3
செய்முறை:
🌹பட்டாணி பருப்பை அலசி 1 1/2 மணி நேரம் ஊற விடவும்.
🌹மிக்ஸியில் காய்ந்த மிளகாய், சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பட்டை, கிராம்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
🌹பருப்பின் தண்ணீரை சுத்தமாக வடித்துக் கொள்ளவும்.
🌹மிக்ஸியில் அரைத்த விழுதுடன் உப்பு,பருப்பை சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.
🌹அரைத்ததை ஒரு பாத்திரத்தில் போட்டு சின்ன வெங்காயம்(நறுக்கியது), புதினா இலை(நறுக்கியது), கொத்தமல்லி இலை (நறுக்கியது),
கறிவேப்பிலை (நறுக்கியது), சோம்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்..
(தண்ணீர் சேர்க்கலாம் பிசையவும்)
🌹வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பருப்பு விழுதை உருண்டை பிடித்து கையால் தட்டி எண்ணெயில் போடவும்.
🌹நுரை அடங்கியவுடன் வடையை எடுத்து சுவைக்கலாம்.
சுவையான பருப்பு வடை தயார்
Tags:
பருப்பு வடை