சுவையான காளான் பிரியாணி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
காளான் - 2 பாக்கெட்
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
பிரிஞ்சி இலை - 3
ஏலக்காய் - 4
முந்திரி - 6
பச்சை மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 2
புதினா இலை - 1 கைப்பிடி
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
தயிர் - மேஜைக்கரண்டி
அரிசி - 2கப்
அரைக்க:
பூண்டு - 50கி
இஞ்சி - 30கி
சின்ன வெங்காயம் - 15-20
பட்டை - 3
கிராம்பு - 4
சோம்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
செய்முறை
🌷 அரிசியை தண்ணீரில் அலசி ஊறப் போடவும்.
🌷ஒரு பாத்திரத்தில் எண்ணெய் , நெய் விட்டு பிரிஞ்சி இலை, மராட்டிய மொக்கு, ஏலக்காய், முந்திரி, பச்சை மிளகாயை கீறி சேர்க்கவும். நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
🌷மிக்ஸியில் பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து அரைக்கவும்.
🌷அரைத்த விழுதை வெங்காயத்துடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
🌷அதனுடன் மஞ்சள் தூள், தயிர், தக்காளி, உப்பு சேர்த்து நன்கு மசிய வதக்க வேண்டும்.
🌷காளானை நன்கு அலசி இரண்டாக வெட்டிக் அதனுடன் சேர்க்கவும்.
🌷காளானே தண்ணீர் விடும், அந்த நீரிலே அது வெந்து விடும்.
🌷2 கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்..
🌷கொதி வரும் போது அரிசியை போட்டு கிளறி விட வேண்டும்.
🌷அரிசி வெந்ததும் சிறிது எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி பரிமாறவும்..
சுவையான காளான் பிரியாணி தயார்
காளானின் பயன்கள்:
☘ ரத்த சோகையை தடுக்கும்.
☘ எலும்பு வலு பெறும்.
☘ மலச்சிக்கலை சரி செய்யும்.
☘ இதயம் வலு பெறும்..
☘ உடல் எடையை குறைக்க உதவுகிறது.
☘ மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும். ...
Tags:
காளான் பிரியாணி