எளிமையான முறையில் உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 4
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
பெ. வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 5-7
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 6-8 பல்
மஞ்சள் தூள் - 1/2தேக்கரண்டி
சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி
கடலை மாவு - 1 கப்
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி இலை - சிறிது
செய்முறை:
🌷உருளைக்கிழங்கை நன்கு அலசி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இரண்டாக வெட்டி போட்டு வேக விடவும்.
🌷வெந்தவுடன் குளிர்ந்த நீர் ஊற்றி அதன் தோலை உரித்து மசித்துக் கொள்ளவும்.
🌷ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்..
🌷அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது மஞ்சள் தூள், சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்.
🌷குருமாவிற்கு தேவையான கடலை மாவை தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் கரைத்து அதனுடன் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்..
🌷நன்கு கொதித்து பச்சை வாசனை அடங்கும் போது மசித்த உருளைக்கிழங்கை போடவும்..
🌷5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்.
சுவையான பூரி உருளைக்கிழங்கு குருமா தயார்
உருளைக்கிழங்கின் பயன்கள்:
* வாத நோய் சரியாகும்..
*இதயம் வலுப்படும்..
* முகம் பொலிவு பெறும்..
*மலச்சிக்கல் சரியாகும்.