எளிமையான சமையல் டிப்ஸ்

 எளிமையான சமையல் டிப்ஸ்

  🌷தோசை வார்க்கும்  போது  கல்லில் ஒட்டிக்  கொள்கிறதா ? ஒரு  சின்ன எலுமிச்சை  அளவு  புளியை வெள்ளைத் துணியில்  கட்டிக்  கொண்டு,  அதை எண்ணெயில்  தொட்டு  கல்லில்  தேய்த்த  பின்,  மாவை  வார்த்தால்  தோசை ஒட்டாமல்  வரும்.. 

🌷உளுத்தம்பருப்பை  எண்ணெய்  விடாமல் சிவக்க வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது  தயிரில்  கலந்து பச்சடி  செய்யலாம். ரசம்  சாதத்தில் அந்தப்  பொடியைப்  போட்டு  கொஞ்சம் எண்ணெய்  அல்லது  நெய்  விட்டு  கலந்து  கொண்டால்  சாதம்  சூப்பர் டேஸ்டுடன்  இருக்கும். 


  🌷பச்சைக்கொத்துமல்லித்தழையைப் பச்சையாக   துவையல்   அமைக்கும்போது
புளி   போடுவதற்கு ஸ பதிலாக  ஒரு  துண்டு மாங்காய்  போட்டு  அரைக்கும்  போது துவையல்  சுவையாக  இருக்கும்.. 

  🌷மைதா மாவு  அல்வா   செய்யும்  போது சில  சொட்டுகள்  பாதாம்  எஸென்ஸ்  கலந்தால்  மணமும்  சுவையும்  கூடும்.. 

   🌷 வெண்டைக்காய்  பொரியல் செய்யும்போது அதனுடன்  சிறிது  சீரகம், தேங்காய்த் துருவலை   லேசாக  சிவந்த நிறம்  வரும்  வரை  வறுத்து  பொடி செய்து   சேர்க்க   வேண்டும்.. 
சாப்பிட்டால்   மணமாகவும், ருசியாகவும்ருசியாகவும்    இருக்கும்.. 





Post a Comment

Previous Post Next Post