தக்காளி ஜாம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
தக்காளி - 4
சர்க்கரை (சீனி) - தேவைக்கேற்ப
நெய் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
🌷ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதற்குள் தக்காளியை அலசி போடவும்.. சிறிது நேரம் விட்டு அடுப்பை அணைக்கவும்.
🌷தண்ணீரில் இருக்கும் தக்காளியை எடுத்து தோல் உரித்து உள்ளிருக்கும் சதை பகுதியை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
🌷அரைத்ததை ஒரு பாத்திரம் வைத்து அதற்கு மேல் வடியை வைத்து வடித்தெடுக்கவும்..
🌷வடித்த தக்காளி சாற்றின் அளவை கணக்கெடுக்கவும்..
🌷தக்காளியின் புளிப்பிற்கு தகுந்தாற்போல் சர்க்கரை சேர்க்கவும்..
🌷(புளிப்புயெனில் 1கப் தக்காளி சாற்றிற்கு 1/4 -1/2 கப் சர்க்கரை சேர்க்கலாம்.. இல்லையெனில் அதற்கு குறைவாக சேர்க்கவும்).
🌷வாணெலியில் அரைத்த சாற்றை ஊற்றி அதற்கு தகுந்தாற்போல் சர்க்கரை போட்டு நெய் விட்டு நன்கு கொதிக்க விடவும்.
🌷ஜாம் பக்குவம் வந்தவுடன் அடுப்பை அ.ணைக்கவும்..
சுவையான தக்காளி ஜாம் தயார்
தக்காளியின் பயன்கள்:
☘ இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது..
☘சரும நோய்கள் வராமல் தடுக்கும்..
☘வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 சத்துக்கள் அடங்கியுள்ளது.
Tags:
தக்காளி ஜாம்