ரவை உப்புமா செய்வது எப்படி?

 ரவை உப்புமா செய்வது எப்படி? 

தேவையான பொருட்கள்:
ரவை                                 -       1 கப்
எண்ணெய்                    -       1 1/2 தேக்கரண்டி
கடுகு                                 -      1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு             -      1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு           -      1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம்    -      2
ப. மிளகாய்                      -      2
காய்ந்த மிளகாய்         -      1
கறிவேப்பிலை              -      சிறிது
கேரட்                                   -      2
பீன்ஸ்                                 -      2
இஞ்சி                                 -      சிறிய துண்டு
பூண்டு                                -      3-4 பல்
உப்பு                                     -      தேவைக்கேற்ப
கொத்தமல்லி இலை  -      சிறிது
நெய்                                    -      1 தேக்கரண்டி

செய்முறை:

🌷வாணெலியில் ரவையை வறுத்தெடுக்கவும்.. 

🌷அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். 

🌷அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதை உப்பு போட்டு வதக்கவும். 

🌷கேரட், பீன்ஸ் இரண்டையும் பொடியாக நறுக்கி அதனுடன் சேர்க்கவும்.. 

🌷பாதி வெந்தவுடன் அதற்கு தேவையான தண்ணீர் சேர்க்கவும்.. 
(*1கப் ரவைக்கு = 3 கப் தண்ணீர் சேர்க்கவும்*) 

🌷தண்ணீர் கொதி வரும் போது ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளற வேண்டும். 

🌷நெய் விட்டு இறக்கவும்.. சிறிது கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்.. 

சுவையான ரவை உப்புமா தயார்

Post a Comment

Previous Post Next Post