பேரிச்சம் பழ சுவீட் சட்டினி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
பேரிச்சம் பழம் - 10
புளி - 1 விரல் நீளம்
குண்டு வெல்லம் - சிறு எலுமிச்சை அளவு
தண்ணீர் - 200 மி.லி
நெய் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
🌷பேரிச்சம் பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு எடுத்து வைக்கவும்..
🌷புளியை தண்ணீரில் அலசி வைக்கவும்..
🌷குக்கரில் பேரிச்சம் பழம், புளி, வெல்லம், தண்ணீர் சேர்த்து மூடி போடவும்..
🌷குறைந்தது 10 விஸ்சில் விட்டு அடுப்பை அனைக்கவும்.
🌷விஸ்சில் குறைந்தவுடன் அதனை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்..
🌷ஒரு பாத்திரத்தை வைத்து அதன் மேல் சல்லடை (வடி)யை வைத்து அரைத்ததை அதில் ஊற்றி வடிக்கவும்.
🌷வாணெலியில் வடித்ததை ஊற்றி சிறிது நெய் விட்டு நன்கு கொதிக்க விடவும்.
🌷ஜாம் பக்குவம் வந்தவுடன் அடுப்பை அனைத்து விட வேண்டும்..
குறிப்பு:
*இந்த சட்டினியை மசால் பூரிக்கு பயன்படுத்தலாம்..
*இட்லி fryக்கு பயன்படுத்தலாம்....
*இரண்டு பன் எடுத்து தோசை கல்லில் வைத்து பொன் நிறமாக எடுக்கவும்.. 2 பன்னிற்கு நடுவில் இந்த சட்டினியை தடவி பரிமாறலாம்..
சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.
பேரிச்சம் பழத்தின் பயன்கள்:
இரும்பு சத்து நிறைந்தது..
கண் ,பல் நோய் சரியாகும்..
புதிய இரத்தம் உண்டாகும்..
உடல் எடையை அதிகரிக்கும்.
சருமத்தை பாதுகாக்கும்..
நரம்பு தளர்ச்சி சரியாகும்..
இரத்த சோகை தடுக்கும்...