கொத்து சப்பாத்தி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி - 2
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/4
கொத்தமல்லி தூள் - 1தேக்கரண்டி
கரம் மசாலா - 1/4தேக்கரண்டி
உப்பு - சிறிது
முட்டை - 1-2
கொத்தமல்லி இலை - சிறிது
செய்முறை:
🌷சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக பிச்சு வைக்கவும்..
🌷வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு உளுத்தம்பருப்பு , பெரிய வெங்காயம் , மிளகாய், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்..
🌷அதனுடன் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு(சிறிது) , கொத்தமல்லி தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்..
🌷அந்த கிரேவியில் பிச்சு வைத்துள்ள சப்பாத்தியை போட்டு கலந்துவிட வேண்டும்..
🌷1 முட்டையை உடைத்து ஊற்றி கிளற வேண்டும்.
🌷கொத்தமல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்.
சுவையான கொத்து சப்பாத்தி தயார்
🌷
Tags:
கொத்து சப்பாத்தி